“கப்பல கட்டி ரிவர்ஸ் வர சொல்றாருங்க...” அகிலன் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் – ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..

அகிலன் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து ஜெயம் ரவி - Interesting incident in Agilan Movie spot | Galatta

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. குடும்பங்கள் கொண்டாடும் கதாநாயகன் என்ற நிலையை பல ஆண்டுகாலமாக தக்க வைத்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 30 படங்களுக்கு மேல் நடித்துள்ள ஜெயம் ரவி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி இயக்குனர் I.அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் இறைவன் படத்திலும் இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் மற்றும் இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு புதிய படம் என அடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜெயம் ரவி. இதனிடையே ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் 28 வது திரைப்படமாக உருவாகி நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின் வரும் மார்ச் 10 ம் தேதி வெளியாகும்  திரைப்படம் அகிலன். அட்டகாசமான அதிரடி திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை ஜெயம் ரவியின் ‘பூலோகம்’பட இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்குகிறார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளியாகவிருக்கும் அகிலன் திரைப்படம் குறித்தும் அப்படத்தின் நிகழ்ந்த பல சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்தும் படத்தின் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் நமது கலாட்டா மீடியா சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

சமீபத்தில் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு இப்போது அவர் குணமடைந்து வருகிறார். இது போன்ற விஷயங்கள் படப்பிடிப்பில் நடக்கும் அசம்பாவிதங்கள் சவாலாக போய் முடிகிறது. இந்த படத்தில் சவாலாக எதை அனுபவித்தீர்கள் என்ற கேள்விக்கு ஜெயம் ரவி,

“விஜய் ஆண்டனி சார் பத்தி பேசுனீங்க. நான் அண்ணாகிட்ட அவர் பற்றியும் அவரது உடல்நலம் பற்றியும் அடிக்கடி  விசாரிப்பேன். அவர் தைரியசாலி டக்கனு சரியாகி வந்துடுவாரு.. நம்ம எல்லாருடைய பிராத்தனையும் அவருக்கு இருக்கு." என்றார் 

மேலும் தொடர்ந்து "சினிமாவை பொதுவா எடுத்துக்கிட்டாலே பல கஷ்டங்கள் இருக்கு, 24 பிரிவும் ஒத்துபோய் வேலை செய்வது ரொம்ப கஷ்டம்.. அது போல படத்தில் நிறைய பிரச்சனைகள் சந்தித்தோம்.. உதாரணமா, கப்பலை கட்டி அதை ரிவர்ஸ் போ.. முன்னாடி வா.. னு சொன்னதெல்லாம் சாதாரணமா இல்லை.. கார் னா கூட பரவால இது கப்பல வெச்சிட்டு கஷ்டமா இருந்தது. அனுமதி கிடைக்காம கஷ்டப்பட்டோம். அப்பறம் அங்க இருந்த கப்பலுக்கே தெரியாம நிறைய விஷயங்கள் பண்ணோம்..  கப்பல் எப்போல்லாம் வருதோ அப்போதெல்லாம் தயாரா இருந்தோம்..” என்றார்.

மேலும் தொடர்ந்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்த ஜெயம் ரவியின் சிறப்பு பேட்டி இதோ..

“பஹீரா திரைப்படம் மன்மதன் படம் போல இருக்கே..” விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்  - முழு வீடியோ இதோ..
சினிமா

“பஹீரா திரைப்படம் மன்மதன் படம் போல இருக்கே..” விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் - முழு வீடியோ இதோ..

“லேடி கெட்டப் போடனும் னு சொன்னேன்.. அவ்ளோதான்..” –  ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்த அட்டகாசமான தகவல்கள் -  சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

“லேடி கெட்டப் போடனும் னு சொன்னேன்.. அவ்ளோதான்..” – ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்த அட்டகாசமான தகவல்கள் - சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

“வா அசுர வா.. பாடல் இப்படிதான் உருவானது” ஜிவி பிரகாஷ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் - முழு வீடியோ இதோ..
சினிமா

“வா அசுர வா.. பாடல் இப்படிதான் உருவானது” ஜிவி பிரகாஷ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் - முழு வீடியோ இதோ..