லியோ படத்தில் தளபதி விஜய் உடன் மாஸ் சண்டை காட்சி... முதல் முதலாக ரகசியத்தை போட்டுடைத்த மிஷ்கின்!

தளபதி விஜயின் லியோ பட சண்டை காட்சி குறித்து பேசிய மிஷ்கின்,director myysskin about thalapathy vijay in leo movie action scene shoot | Galatta

தன்னிகரற்ற பெரும் கதாநாயகனாகவும் தென்னிந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தியாகவும் திகழும் தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படமான தளபதி 67 படத்தில் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்த தளபதி விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படம் இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆகும் என பட்டக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக  அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து  மேயாத மான், ஆடை மற்றும் குலு குலு ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனர் தீரஜ் வைதி ஆகியோர் லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். தற்சமயம் லியோ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே லியோ திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்து வந்த இயக்குனர் மிஷ்கின் தன் பகுதி படப்பிடிப்பை கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு நிறைவு செய்தார். இது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் மிஷ்கின் அவர்களோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மிஷ்கின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின் லியோ திரைப்படத்தின் சண்டைக் காட்சி குறித்தும் தளபதி விஜய் அவர்கள் குறித்தும் மனம் திறந்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஒருமுறை ஒரு தனியார் தொலைக்காட்சி விருது விழாவில் பேசிய போது லியோ பட படப்பிடிப்பு குறித்து அப்டேட் கொடுத்த இயக்குனர் மிஷ்கின் இந்த முறை ஒரு முக்கியமான சண்டைக் காட்சியின் படப்பிடிப்பு குறித்து பேசினார்.

அப்படி பேசுகையில், "ஒரு சண்டைக்காட்சியில் அப்படி அடித்தால் அவர் மீது அடிப்படும் என சொன்ன அந்த அக்கறை...! பின்னர் நான் சென்று சொன்னேன் இல்லை விஜய் நீங்கள் அடியுங்கள் என்னால் தாங்க முடியும் ஏனென்றால் நானும் இயக்குனர் தான் இந்த சண்டை காட்சிகள் குறித்து விஷயங்கள் எனக்கும் தெரியும். மேலும் ஒரு மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞராக தெரியும் என்றேன். பின் அடித்ததற்கு பிறகு உடனடியாக என் அருகில் வந்து ஏதாவது அடிபட்டதா என விசாரித்தார். அந்த அக்கறை இருக்கிறதே! அவர்தான் ரியல் ஹீரோ" எனக் குறிப்பிட்டு மிஷ்கின் பேசியுள்ளார்.
 

ரசிகர்கள் எதிர்பார்த்த லெஜண்ட் சரவணனின் தி லெஜண்ட் பட OTT ரிலீஸ்... அதிரடியாக வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

ரசிகர்கள் எதிர்பார்த்த லெஜண்ட் சரவணனின் தி லெஜண்ட் பட OTT ரிலீஸ்... அதிரடியாக வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த ஹிட் உறுதி... சொப்பன சுந்தரி படத்தின் அட்டகாசமான ட்ரெய்லர் இதோ!
சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த ஹிட் உறுதி... சொப்பன சுந்தரி படத்தின் அட்டகாசமான ட்ரெய்லர் இதோ!

சினிமா

"விரோதியை கூட நோகடிக்காத பண்பு... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கார் பயணம்!"- மனம் திறந்த பார்த்திபனின் வைரல் கவிதை இதோ!