கேரள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு neutral யூனிபார்ம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதனைத் தமிழ்நாட்டில் செயல்படுத்துவது சாத்தியமா என்கிற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்து உள்ளது.

தமிழ்நாடு போலவே கேரளாவில் பல முன்னோடி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கமாகி வருகிறது. வீடு தேடி மதிய உணவு வழங்குவது தொடங்கி முற்போக்கான திட்டங்கள் பல கேரளாவில் கொண்டு வரப்பட்டு வருகிறது.

கேரள மக்கள் சற்று வித்தியாசமானவர்கள். அவர்கள் செய்யும் சில செய்கைகள் பல நேரங்களில் இணையத்தில் டிரெண்ட் அடித்து, அது தமிழ்நாட்டிலும் பேசும் விசயமாக மாறுவதுண்டு. 

முக்கியமாக, கேரளா பெண்கள் அடிக்கடி கூட்டாகச் சேர்ந்து நடனம் ஆடி வெளியிடும் வீடியோக்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் டிரெண்டாவதுண்டு.

அதன்படி, “வீடு தேடி மதிய உணவு வழங்குவது தொடங்கி, முற்போக்கான பல திட்டங்கள் கேரளாவில் சமீப காலமாகக் கொண்டு வரப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் தான் கேரளாவில் உள்ள அரசுப் பள்ளிகளில் தற்போது neutral யூனிபார்ம் என்று சொல்லப்படும் பெண்களுக்கும் பேண்ட், ஷர்ட் யூனிபார்மாக மாற்றப்பட்டு உள்ளது, அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனால், கேரளாவில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் ஒரே மாதிரியான சீருடை அறிமுகம் செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது. 

ஆனால், இதற்கு முன்னதாக தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளிகளில் ஆண்களுக்கு பேண்ட் - ஷர்ட், சிறுவருக்கு கால் சட்டை - சட்டை வழங்கப்படுவது போல், பள்ளி மாணவிகளுக்கு சுடிதார், கோட் என்றும், சிறுமிகளுக்கு கவுன் போன்ற உடை மற்றும் கோட் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்திலும் இப்படியான நடைமுறையே இப்போது வரை நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில் தான், கேரளாவில் உள்ள அரசுப் பள்ளிகளில் இருபாலினருக்கும் சமமான பேண்ட் -ஷர்ட் யூனிபார்ம் வழங்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி, கேரள மாநிலம் பாலுசேரியில் உள்ள அரசுப் பள்ளியில் இருபாலருக்கும் ஒரே மாதிரியான பேண்ட் -ஷர்ட் யூனிபார்ம் நேற்றைய தினம் வழங்கப்பட்ட. 

அதனைப் பெற்றுக்கொண்ட அந்த அரசுப் பள்ளியின் மாணவ, மாணவியர், நீல நிறத்திலான பேண்ட் ஷர்ட் அளிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, இந்த புதிய வகை யூனிபார்ம்களை  அந்த மாணவ மாணவிகள் இன்று பள்ளிக்கு அணிந்து வந்தனர். இதனால், கேரள அரசின் இந்த புதிய வகை யூனிபார்ம், மாணவிகள் இடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

அத்துடன், மாணவிகள் பலரும் இதை வகையினலா புதிய யூனிபார்மை முழுவதும் பாராட்டி வரவேற்று உள்ளனர்.

இந்த நிலையில் தான், கேரள அரசின் இந்த யூனிபார்ம் விசயம் இணையத்தில் வைரலான நிலையில், தமிழகத்தில் உள்ள நெட்டிசன்கள் பலரும், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் இது சாத்தியப்படுத்தப்பட வேண்டும்” என்று, கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இதனால், “தமிழ்நாட்டில் இருபாலினருக்கும் சமமான பேண்ட் -ஷர்ட் யூனிபார்ம் தமிழ்நாட்டில் சாத்தியமா?” என்கிற கேள்வியும், தற்போது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.