தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா.தனது நடிப்பாலும் அழகாலும் பல ரசிகர்களை பெற்றிருந்தார் சமந்தா.பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்துவிட்டு சமந்தா அடுத்ததாக தனி ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து அசத்தினார்.

இவற்றை தவிர பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார் சமந்தா.அடுத்ததாக சகுந்தலம்,Dream Warrior Pictures தயாரிப்பில் ஒரு படம்,யசோதா,விஜய் தேவர்கொண்டாவுடன் VD 11 என பிஸியாக உள்ளார் சமந்தா.இவற்றை தவிர முதன்முறையாக அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் சமந்தா.

இந்த பாடல் பெரிய வரவேற்பை பெற்றது.இவற்றை தவிர இவர் ஒரு ஆங்கில படத்திலும் நடிக்கினார்.Arrangement of Love என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது.அடுத்தடுத்து படங்களில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக சமந்தா மாறியுள்ளார்.இவர் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தா,நயன்தாரா,விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர்.சமந்தாவின் கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.இதுகுறித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார் சமந்தா.

ஷூட்டிங்கில் இருப்பதால் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க முடியவில்லை ,பல வாழ்த்துக்கள் வந்துகொண்டே இருக்கிறது ஒவ்வொருவருக்கும் தனி தனியாக நன்றி தெரிவிக்க முடியாததால் இந்த வீடீயோவை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.