பக்காவான கமர்ஷியல் குடும்ப படமாக தளபதி 66 இருக்கும்...தயாரிப்பாளர் நம்பிக்கை !
By Aravind Selvam | Galatta | April 30, 2022 18:36 PM IST
தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் தளபதி 66.
தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இந்த படத்தினை இயக்குகிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சரத்குமார் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.
பாடல் ஷூட்டிங்குடன் இந்த படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது.அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக செட் வேலைகள் நடைபெற்று வருகிறது.சமீபத்தில் ஒரு டிவி சேனலுக்கு பேட்டி அளித்த தயாரிப்பாளர் தில் ராஜு, அனைத்து அம்சங்களும் நிறைந்த ஒரு பக்கா குடும்ப படமாக இருக்கும் என்றும் ஒரு செம எமோஷனல் கனெக்ட் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
. @Actorvijay 66 had all Elements , action , romance , emotional scenes Family entertainer pic.twitter.com/SOI3dsXxV9
— #Thalapathy66 (@Vijay66FilmOffI) April 29, 2022