திருச்சியில் வசந்த் அன் கோ வின் 104 வது கிளை திறப்பு விழா, மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

“வசந்த அன் கோ” என்றாலே, சிரித்த முகத்தோடு தோன்றும் அதன் உரிமையாளர் வசந்தகுமார் அண்ணாச்சியின் முகம் தான் அனைவருக்கும் ஞாபகத்தில் வந்து செல்லும். 

மளிகைக் கடை முதல் மக்களவை வரை, தன்னுடைய அயராது மாபெரும் உழைப்பாள் அனைவர் உள்ளங்களிலும், எல்லா இடங்களிலும் உயர்ந்து நின்றவர் வசந்தகுமார் அண்ணாச்சி. அவர் தான், “வசந்த அன் கோ” வின் அடையாள சின்னம். அவர் மறைந்தாலும், வசந்தகுமாரின் சிரிப்பு மட்டும் எல்லோர் மனங்களிலும் மறையாமல் அப்படியே இருக்கிறது.

அப்படியான புன்னகை மன்னன் வசந்தகுமார் கட்டி எழுப்பிய “வசந்த அன் கோ” சாம்ராஜ்யம், இன்றும் கொடிகட்டிப் பறக்கிறது. அதன் வெளிப்பாடாக, தற்போது மேலும் ஒரு புதிய கிளையைத் திருச்சியில் திறந்திருக்கிறது வசந்த அன் கோ நிறுவனம்.

Vasanthan_co

ஆம், “இந்தியாவின் நம்பர் ஒன் டீலர்” ஆன, வசந்த் அன் கோ நிறுவனத்தின் 104 வது கிளையானது, திருச்சி அண்ணாமலை நகர் - கரூர் பைபாஸ் சாலையில் நேற்றைய தினம் புதிதாகத் திறக்கப்பட்டு இருக்கிறது.

வசந்த் அன் கோ வின் 104 வது கிளையை, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தமிழ்ச் செல்வி வசந்த குமார், ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி, புதிய கிளைகளைத் தொடங்கி வைத்தார்.

அதன் படி, வசந்த் அன் கோ வின் 104 வது திருச்சி கிளையில், முதலில் பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் வினோத் குமார் ஆகியோர் முதல் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

அத்துடன், வசந்த் அன் கோ வின் 104 வது கிளை திறப்பு விழாவில்; தொழிலதிபரும், பொதுக்குழு உறுப்பினருமான ஜோசப் லூயிஸ், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் மற்றும் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர், கலை வர்த்தக பிரிவு மாநிலச் செயலாளர் வரதராஜன், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் ரங்கராஜன், காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள், பொது மக்கள் மற்றும் ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

மேலும், வசந்த் அன் கோ வின் 104 வது கிளை திறப்பு விழா நிகழ்வின் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.