தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் இந்த ஆண்டில் (2022) சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல், வேழம் என வரிசையாக அடுத்தடுத்து 4 திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றன.

மேலும் தெலுங்கில் வெளிவந்த அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம் எனும் திரைப்படத்திலும் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார் அசோக் செல்வன். இந்த வரிசையில் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் 3 கதாபாத்திரங்களில் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் (தெலுங்கில் ஆகாஷம்) நித்தம் ஒரு வானம்.

தனது முதல் திரைப்படமாக இயக்குனர் Ra.கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் நித்தம் ஒரு வானம் திரைப்படத்தில் அசோக்செல்வன் உடன் இணைந்து ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷ்வதா, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து நித்தம் ஒரு வானம் திரைப்படத்தை தயாரித்துள்ளன.

விது அய்யனா ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நித்தம் ஒரு வானம் திரைப்படத்தில் வீரா, அர்ஜுன், பிரபா என மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அசோக் செல்வனின் புதிய போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த போஸ்டர்கள் இதோ…
 

Introducing @AshokSelvan as Veera, Arjun and Prabha.
Our instinctive, fearless and cheery lead#NithamOruVaanam@riturv @Aparnabala2 @ShivathmikaR @AndhareAjit @PentelaSagar @Viacom18Studios @riseeastcre @vidhu_ayyanna @editoranthony @zeemusicsouth @vinoth_offl @DoneChannel1 pic.twitter.com/xyzHmzsP1n

— Ra.Karthik (@Rakarthik_dir) September 20, 2022