சினிமாவில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற கனவோடு வந்து பலரும் தங்கள் திறமைகளை யூடியூப்,இன்ஸ்டாகிராம் போன்ற பல தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.அப்படி திறமையை வெளிப்படுத்தி பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றனர்.

யூடியூப்பில் வெப் சீரிஸ் ஒன்றில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் தீபா பாலு.தொடர்ந்து ஆல்பம் பாடல்கள்,வெப் சீரிஸ் போன்றவற்றில் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார் தீபா பாலு.இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.இவர் தற்கொலை செய்துகொண்டதாக சில தகவல்கள் வெளியாகி வந்தன.உடனடியாக அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை தொடர்பு கொண்டு விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

இதனை அடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தான் நலமாக இருப்பதாகவும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.சில நாட்களுக்கு முன் இறந்த துணை நடிகைக்கு பதிலாக தவறுதலாக இவரது பெயரில் சிலர் தவறான செய்திகளை வெளியிட்டு இந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.இந்த குழப்பத்தை தற்போது தீபா வீடியோ மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.