தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நானே வருவேன்.காதல் கொண்டேன்,புதுப்பேட்டை,மயக்கம் என்ன படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக செல்வராகவன் தனுஷுடன் இணைந்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தினை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் இந்துஜா,யோகி பாபு,ஸ்வீடன் நடிகை Elli AvrRam,செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த படம் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் Gulf மற்றும் சிங்கப்பூர் ஏரியாக்களின் விநியோக உரிமையை பிரபல விநியோக நிறுவனமான ஹோம்ஸ்கிரீன் எண்டெர்டைன்மெண்ட் கைப்பற்றியுள்ளனர் என்ற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.