ஹாஸ்டல் படத்தின் கலகலப்பான புது Sneak Peek வீடியோ!
By Anand S | Galatta | April 27, 2022 19:14 PM IST

தொடர்ந்து பல வித்தியாசமான கதை களங்களில் பலவிதமான நல்ல கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் அசோக்செல்வன். முன்னதாக இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அசோக்செல்வன் நடித்து சமீபத்தில் வெளிவந்த மன்மதலீலை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற சூப்பர்ஹிட்டானது.
மன்மத லீலை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் நித்தம் ஒரு வானம் மற்றும் ஆகாசம் ஆகிய திரைப்படங்களில் அசோக்செல்வன் நடித்து வருகிறார். இதனிடையே அசோக்செல்வன் கதாநாயகனாக நடித்திருக்கும் ஹாஸ்டல் திரைப்படம் நாளை ஏப்ரல் 28-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
முன்னதாக மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அடி கப்பயர கூட்டமணி படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகியுள்ள ஹாஸ்டல் திரைப்படத்தில், அசோக் செல்வன் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, சதீஷ், நாசர், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஹாஸ்டல் படத்திற்கு பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்ய, போபோ ஷஷி இசையமைத்துள்ளார். இந்நிலையில், தற்போது ஹாஸ்டல் திரைப்படத்திலிருந்து புதிய Sneak Peek வீடியோ வெளியானது. கலகலப்பான அந்த வீடியோ இதோ…