சித்திரம் பேசுதடி படத்திலிருந்து சைக்கோ படம் வரை பலவிதமான கதை களங்களில் தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து பல திரைப்படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வரும் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் முன்னதாக ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் பிசாசு.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற பிசாசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பிசாசு 2 திரைப்படம் தயாராகியுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாக்கியுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார். பிசாசு 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. 

முன்னதாக பிசாசு 2 படத்தின் டீசர் வருகிற ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிசாசு 2 திரைப்படத்தின் கன்னட திரையரங்க ரிலீஸ் உரிமட்டை கமர் பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.