காதல் கோட்டை படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர் தேவயானி.தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார் தேவயானி.இயக்குனர் ராஜகுமாரனை இவர் காதலித்து கடந்த 20001-ல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து 2004-2005 வரை நடித்து வந்த தேவயானி , அதன் பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.2003-ல் சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் தேவயானி.ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்த இந்த தொடர் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

2003 முதல் 2009 வரை 1500க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பானது.இதனை தொடர்ந்து சில முன்னணி சேனல்களில் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வந்தார் தேவயானி.ஜீ தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் புது புது அர்த்தங்கள் தொடரில் தேவயானி முன்னணி வேடத்தில் நடிக்கிறார்.

இந்த தொடரில் அபிஷேக்,பார்வதி,நியாஸ் கான்,லியோனி,தேவிப்பிரியா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகின்ன்றனர்.300 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் புது என்ட்ரியாக பிரபல சீரியல் நடிகர் வருண் உதய் இணைந்துள்ளார்,இதற்கான ப்ரோமோவை சீரியல் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.