நடிகர் ஆர்யாவுக்கு கடந்த ஆண்டு வெளியான காப்பான் மற்றும் மகாமுனி திரைப்படங்கள் வெளியாகியது. இந்த இரண்டு படங்களிலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் பா. ரஞ்சித்துடன் ஆர்யா 30 படத்திற்கு இணைந்தார் ஆர்யா. கபாலி, காலா படத்திற்குப் பிறகு ஆர்யாவை வைத்து படம் இயக்கி வந்தார் ரஞ்சித். இப்படம், வடசென்னை குத்துச்சண்டை வீரர்களை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இது, 1980-களில் நடப்பது போன்ற கதைக்களத்தை கொண்ட படமாகும். 

சார்பட்டா பரம்பரை என தலைப்பிடப்பட்ட இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. வட சென்னையில் உள்ள இளைஞன் தனது பாக்ஸிங் கனவுகளை எப்படி நிஜமாக்கிக்கொள்கிறான் என்பதைப் பற்றிய கதை தான் இது. இந்த படத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, தனது உடற்கட்டை முற்றிலுமாக மாற்றியுள்ளார் ஆர்யா. 

தற்போது வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பாக்ஸிங் ரிங்கில் நிற்கிறார் ஆர்யா. படம் குறித்து பதிவு செய்த இயக்குனர் பா.ரஞ்சித், இங்க வாய்ப்புன்றது  நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல,,இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்க்கும் போது படத்தில் கபிலன் என்ற பாத்திரத்தில் ஆர்யா நடித்திருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் போஸ்டரில் ரோசமான ஆங்கில குத்து சண்டை என்றும் எழுதப்பட்டுள்ளது. 

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. ஆர்யா ஜோடியாக துஷாரா நடிக்கிறார். படத்தில் வடசென்னை பெண்ணாக நடிக்கிறார் என்ற தகவல் தெரியவந்தது. நடிகர் கலையரசன், ஜான் கொக்கென், ஷபீர், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். முரளி ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா படத்தொகுப்பு செய்கிறார். ராமலிங்கம் கலை பணிகள் மேற்கொள்கிறார். அன்பறிவு சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார். 

இந்த படத்தை தொடர்ந்து அனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் எனிமி திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார். பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் அரண்மனை 3 படப்பிடிப்புக்கு பின்னர் இதில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்யா நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் டெடி. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார்.