அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா.இதனை தொடர்ந்து இவர் நடித்த சர்வம்,மதராசபட்டினம்,பாஸ் என்ற பாஸ்கரன்,ராஜா ராணி என்று வரிசையாக படங்கள் ஹிட் அடிக்க ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தார் ஆர்யா.இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மகாமுனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை அடுத்து சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் டெடி படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சயிஷா ஹீரோயினாக நடித்திருந்தார்.சதிஷ்,சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் படம் ஆர்யா 30.இந்த படத்தை காலா,கபாலி,மெட்ராஸ் உள்ளிட்ட வெற்றி  படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தில் துஷாரா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படம் பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

கலையரசன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் டிசம்பர் 2ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த பர்ஸ்ட்லுக் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.