தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் அரவிந்த்சுவாமி. கடைசியாக இயக்குனர் A.L.விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளிவந்த தலைவி படத்தில் அரவிந்த் சுவாமி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பயோபிக் திரைப்படமாக வெளிவந்த தலைவி திரைப்படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் தயாரிப்பில் வெளிவந்த நவரசா வெப்சீரிஸில் ரௌத்திரம் எனும் எபிசோடை இயக்கி இயக்குனராகவும் கவனத்தை ஈர்த்தார். 

தொடர்ந்து அரவிந்த் சுவாமியின் நடிப்பில் நரகாசுரன், சதுரங்க வேட்டை 2, கள்ளபார்ட் மற்றும் வணங்காமுடி ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர தயாராகி வருகின்றன. இதனிடையே இயக்குனர் ஃபெல்லினி இயக்கத்தில் ரெண்டகம் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அரவிந்த் சுவாமி. 

அரவிந்த் சுவாமியின் இணைந்து குஞ்சாக்கோ போபன், ஜாக்கி ஷெராப், ஈஷா ரெபா, ஆடுகளம் நரேன் ஆகியோர் ரெண்டகம் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள், ஆகஸ்ட் சினிமா மற்றும் சினிஹாலிக்ஸ் இணைந்து தயாரித்துள்ள ரெண்டகம் படத்திற்கு கௌதம் ஷங்கர் ஒளிப்பதிவு செய்ய, A.H.கசீஃப் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ரெண்டகம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் வகையில் புதிய மோஷன் போஸ்டர் தற்போது வெளியானது. வருகிற செப்டம்பர் 2 ஆம் தேதி ரெண்டகம் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெண்டகம் திரைப்படத்தின் அந்த மோஷன் போஸ்டர் இதோ…