இன்றைய காலகட்டத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக அதை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் வல்லமை படைத்த நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.இவரது வளர்ச்சி பல நடிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்துள்ளது.

சோலோ ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி.தனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் வயதான கேரக்டராக இருந்தாலும் சரி மற்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை.அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் VJS 46,வெற்றிமாறனின் விடுதலை,மைக்கல்,Merry Christmas,மாநகரம் ஹிந்தி ரீமேக் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இவற்றை தவிர Farzi என்ற ஹிந்தி வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி,இவர் அடுத்ததாக சில முக்கிய படங்களில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி வந்தது.தற்போது விஜய்சேதுபதி ஷாருக் கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவலை அவரது PRO உறுதிசெய்துள்ளார்.மேலும் புஷ்பா 2 உள்ளிட்ட சில தெலுங்கு படங்களில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என வெளிவரும் தகவல்கள் வெறும் வதந்தி தான் என தெளிவு படுத்தியுள்ளார்.