லைகா ப்ரொடக்ஷன்ஸ் உடன் கைகோர்த்த அருண் விஜயின் அடுத்த ஆக்ஷன் படத்தில் பெரிய மாற்றம்... அதிரடி அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!

லைகா ப்ரொடக்ஷன்ஸ் உடன் கைகோர்த்த அருண் விஜயின் மிஷன்,arun vijay in acham enbathu illaye movie title changed lyca productions | Galatta

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக தனக்கே உரித்தான ஸ்டைலில் அதிரடியான படங்களில் நடித்து வருபவர் நடிகர் அருண் விஜய். கடந்த 2022 ஆம் ஆண்டில் தனது மகன் அர்ணவ் விஜயை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய படமான ஓ மை டாக், முன்னணி கமர்சியல் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அதிரடி ஃபேமிலி என்டர்டெய்னர் படமாக யானை, மற்றும் க்ரைம் திரில்லர் படமாக வந்த சினம் ஆகிய திரைப்படங்கள் அருண் விஜய் நடிப்பில் வரிசையாக வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. முன்னதாக இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த பார்டர் திரைப்படமும், இயக்குனர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் & விஜய் ஆண்டனி இணைந்து நடித்த அக்னி சிறகுகள் திரைப்படமும் நீண்ட நாட்களாக ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கத்தில் தற்போது வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார்.

இதனிடையே தனது திரை பயணத்தில் அடுத்த அதிரடி ஆக்சன் படமாக அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் அச்சம் என்பது இல்லையே. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் AL.விஜய், மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமாக இயக்கிய தலைவி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த திரைப்படமாக அருண் விஜய் உடன் இணைந்த இந்த, அச்சம் என்பது இல்லையே திரைப்படத்தில் எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க அபி ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் மற்றும் நியூ மார்ச் ஃபர்ஸ்ட் பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் அச்சம் என்பது இல்லையே திரைப்படத்தில் சந்திப்.K.விஜய் ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பு செய்ய ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். A.மகாதேவ் கதை திரைக்கதையில் இயக்குனர் விஜய் வசனம் எழுதி இயக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அச்சம் என்பது இல்லையே படத்திற்கு ஸ்டண்ட் சில்வா ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அச்சம் என்பது இல்லையே திரைப்படத்தின் டைட்டில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அச்சம் என்பது இல்லையே என்ற டைட்டிலுக்கு பதிலாக மிஷன் சாப்டர் 1 என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் வழங்குவதாகவும், படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்து இருப்பதாகவும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.. கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் வழங்கும் அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 திரைப்படம் தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் விரைவில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்நிலையில் இவை அனைத்தையும் அறிவிக்கும் வகையில் அட்டகாசமான புதிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இதோ…
 

We're heading on a Fearless MISSION! 😎 🔥
It's Thrilling 🤯 Exciting 🤩 & what not⁉️

Directed by #Vijay
Starring 🌟 @arunvijayno1 @iamAmyJackson @NimishaSajayan @AbiHassan_ @gvprakash @silvastunt @sssmoffl #Rajashekar & #Swathi @shiyamjack @DoneChannel1 @gkmtamilkumaran pic.twitter.com/E7N2JI18Rf

— Lyca Productions (@LycaProductions) April 3, 2023

முதல் முறையாக தன் குழந்தைகளின் முழு பெயரை அறிவித்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
சினிமா

முதல் முறையாக தன் குழந்தைகளின் முழு பெயரை அறிவித்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

'நடிகராகவும் மனிதராகவும் விடுதலை படத்திற்கு பின் நடந்த மாற்றங்கள் என்னென்ன?'- மனம் திறந்த சூரியின் ஸ்பெஷல் பேட்டி இதோ!
சினிமா

'நடிகராகவும் மனிதராகவும் விடுதலை படத்திற்கு பின் நடந்த மாற்றங்கள் என்னென்ன?'- மனம் திறந்த சூரியின் ஸ்பெஷல் பேட்டி இதோ!

அட்டகாசமான ஆரம்பம்... தளபதி விஜய் இன்ஸ்டாகிராமில் நுழைந்ததும் படைத்த 3 புதிய சாதனைகள்! விவரம் உள்ளே
சினிமா

அட்டகாசமான ஆரம்பம்... தளபதி விஜய் இன்ஸ்டாகிராமில் நுழைந்ததும் படைத்த 3 புதிய சாதனைகள்! விவரம் உள்ளே