தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடிக்கும் நடிகர் தனுஷ் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என பல மொழி திரைப்படங்களிலும் தரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சீரியஸான கதாபாத்திரங்களாக இருந்தாலும் தங்களோடு எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக் கூடிய மிக யதார்த்தமான சாதாரண கதாபாத்திரங்களாக இருந்தாலும் வெகு எளிதாக நடித்து அனைவரையும் கவர்பவர் தனுஷ்.

அந்த வகையில் யாரடி நீ மோகினி , வேலையில்லா பட்டதாரி திரைப்படங்களின் பாணியில் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் உடன் இணைந்து நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், முனீஷ்காந்த் ஆகியோர் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்ன GK படத்தொகுப்பு செய்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இன்று ஆகஸ்ட் 18ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் வெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.   

முன்னதாக இன்று சென்னையில் உள்ள ரோகினி சில்வர் ஸ்கிரீன்ஸ் திரையரங்கில் நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் உட்பட திருச்சிற்றம்பலம் படக்குழுவினர் ரசிகர்களோடு சேர்ந்து திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசித்தனர். இதனிடையே ரோகினி சில்வர் ஸ்கிரீன்ஸ் தியேட்டரில் படத்தை கொண்டாடிய ரசிகர்கள் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்த ஸ்க்ரீனை சேதப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் ரசிகர்கள் இவ்வாறு புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களில் திரையரங்குகளை சேதப்படுத்துவது திரையரங்க உரிமையாளர்களை வேதனைக்குள்ளாக்கி வருகிறது.
 

The illiterate who did this does not even know the value of this . Even if the retard watches 1000 movies , cannot make up even half of the investment.

Why can’t that person tear his own dress instead 🤬🤬🤬 https://t.co/BpJvaTMpJI

— Rakesh Gowthaman (@VettriTheatres) August 18, 2022