"பெரிய படமா வரும்.. வந்தா தெரிஞ்சிக்குவீங்க!"- கமல்ஹாசனின் இந்தியன் 2 குறித்து மனம் திறந்த கலை இயக்குனர் முத்துராஜ்! ஸ்பெஷல் வீடியோ

கமல்ஹாசனின் இந்தியன் 2 குறித்து மனம் திறந்த கலை இயக்குனர் முத்துராஜ்,art director muthuraj about kamal haasan in indian 2 movie | Galatta

விக்ரம் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் KH233 மற்றும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் KH234 என அடுத்தடுத்து அட்டகாசமான படங்களில் நடிக்க இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். விபத்தின் காரணமாக தடைபட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பின்னர் தடைகளை அத்தனையும் நீங்கிய பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். 

அங்காடித்தெரு, நண்பன், ஐ, புலி, தெறி, ரெமோ, மெர்சல், 2.O, பிகில், அயலான், ஜவான் படங்களின் கலை இயக்குனரான முத்துராஜ் அவர்கள் இந்த பிரம்மாண்டமான இந்தியன் 2 படத்திலும் கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த கலை இயக்குனர் முத்துராஜ் அவர்கள் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் அந்த வகையில் பேசும் போது, இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் “இந்தியன் 2” படம் குறித்து கேட்டபோது, “நன்றாக போய்க் கொண்டிருக்கிறது இந்த படம் ஒரு பெரிய படமாக வரும் அது வந்தால் தெரிந்து கொள்வீர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறது ஒவ்வொரு கட்ட படப்பிடிப்பும் நிறைய வேலை செய்திருக்கிறோம்.” என்றார். 

தொடர்ந்து அவரிடம், “இந்த படம் தொடங்கப்பட்டு திடீரென நிறுத்தப்பட்டு ஒரு பெரிய இடைவேளையாகி பின்னர் மீண்டும் பணியாற்றுகிறீர்கள். இதற்கிடையில் வேறு ஒரு படத்தில் பணியாற்றி விட்டு மீண்டும் இந்தியன் 2 படத்திற்கு செல்லும் போது எப்படி இருந்தது?” எனக் கேட்டபோது, “படத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று தான் எல்லோரும் ஆசைப்படுவார்கள்... நமக்கும் வருத்தம் தான் அது இடையில் தடைபட்டது குறித்து... நீங்கள் செய்து வைத்த பணிகள் எல்லாம் திடீரென அந்த இடைவெளிக்கு பிறகு வேறு படங்களில் இடம்பெறும் போது மிகவும் வருத்தமாக இருக்கும். இந்த மாதிரி நீண்ட காலம் பணியாற்றும் படங்கள் வரும் போது அது ஒன்றுதான் கஷ்டமாக இருக்கும் அதனால்தான் இது மாதிரி படங்கள் பண்ணும் போது வெளியில் எதுவுமே பேசுவது கிடையாது. சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்று தான் நாம் ஆசைப்படுவோம் ஆனால் சூழ்நிலைகள் அதற்கு தகுந்த மாதிரி இருக்க வேண்டும். எப்போது திரையில் பார்ப்போம் என காத்திருக்கிறேன்.” என பதில் அளித்து இருக்கிறார் இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட கலை இயக்குனர் முத்துராஜ் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.