தளபதி விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்… லோகேஷ் கனகராஜின் லியோ பட மிரட்டலான புது போஸ்டர் இதோ!

தளபதி விஜயின் லியோ பட தெலுங்கு போஸ்டர் வெளியீடு,thalapathy vijay in leo movie telugu poster out now | Galatta

தளபதி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் லியோ படியாக அப்டேட் கொடுக்க முடிவு செய்திருக்கும் நிலையில் அதன் முதல் படியாக தற்போது லியோ திரைப்படத்தின் அதிரடியான புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக தளபதி விஜய் உடன் இணைந்திருக்கும் திரைப்படம் தான் லியோ. தளபதி விஜயின் திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் லியோ திரைப்படத்தை உலக அளவில் மிக பிரம்மாண்டமாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தில் ஆறு வாரங்களுக்கு முன்பே லியோ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில் அட்வான்ஸ் புக்கிங் அதிரடியாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்தியா மற்றும் தமிழ்நாட்டிலும் லியோ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 125 நாட்கள் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. எனவே இறுதி கட்டப் பணிகளும் மிரட்டலான VFX பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம் பெற்ற கழுதைப்புலி உடனான சண்டைக் காட்சியின் VFX பணிகள் அனைத்தும் தற்போது பெங்களூரில் உள்ள முன்னணி VFX நிறுவனத்தில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 30ம் தேதி நடைபெற இருப்பதாக தெரிகிறது. 

ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் லியோ திரைப்படத்தின் அப்டேட்களுக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் இன்று செப்டம்பர் 17ஆம் தேதி முதல் ரிலீஸ் வரையில் தொடர்ச்சியாக லியோ படத்தின் அப்டேட்டுகள் வரும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதன் தொடக்கமாக இன்று லியோ திரைப்படத்தின் புதிய தெலுங்கு போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இன்றுடன் சேர்த்து அடுத்த நான்கு நாட்களுக்கு அதிரடியான போஸ்டர்கள் வெளிவர இருப்பதாகவும் பட குழு அறிவித்துள்ளனர். தற்போது வெளிவந்திருக்கும் மிரட்டலான அந்த புதிய போஸ்டர் இதோ…
 

KEEP CALM AND AVOID THE BATTLE

Watch out.. #LeoPosterFeast will unveil stories, one poster at a time 😁

Aatalu paatalu tho mee #Leo Telugu lo release avthundhi 🔥#LeoTeluguPoster #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjaypic.twitter.com/ryXr9ufWs8

— Seven Screen Studio (@7screenstudio) September 17, 2023