இறுதி கட்டத்தை நெருங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம்… அதிரடி அப்டேட் உடன் வந்த புது GLIMPSE இதோ!

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் டப்பிங்கை முடித்த ரஜினிகாந்த்,superstar rajinikanth completed his dubbing for lal salaam movie | Galatta

கிரிக்கெட்டை மையப்படுத்தி ஸ்போர்ட்ஸ் பணமாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படத்தின் டப்பிங் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக பல கோடி ரசிகர்களின் மனதை வென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் அடுத்தடுத்து தயாராகும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. முன்னதாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. முதல் முறை இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடித்த ஜெயிலர் திரைப்படம் 25 நாட்களைக் கடந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறி பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்துள்ளது. 

அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 170-வது திரைப்படமாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் #தலைவர்170 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய TJ.ஞானவேல் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் நடிக்கும் தலைவர்170 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அடுத்த சில வாரங்களில் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அதற்கான அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தலைவர் 171 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உருவாகி இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் மிக மொய்தின் பாய் எனும் முக்கிய கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட் மற்றும் அதன் அரசியலை மையமாக வைத்த திரைப்படமாக தயாராகும் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கிரிக்கெட் சார்ந்த திரைப்படம் என்பதால் திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான கபில் தேவ் அவர்கள் முதல்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்யும் லால் சலாம் திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். 

சமீபத்தில் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் லால் சலாம் திரைப்படத்தின் டப்பிங்கை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கிய நிலையில் தற்போது முழு டப்பிங்கையும் நிறைவு செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டப்பிங்கில் இருக்கும் புதிய வீடியோ ஒன்றை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இதோ...