"மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதா வந்தது எப்படி?"- விஷால் & ஆதிக் ரவிசந்திரனின் சுவாரசியமான பேட்டி இதோ!

மார்க் ஆண்டனியின் சில்க் ஸ்மிதா பற்றி பேசிய விஷால் ஆதிக் ரவிச்சந்திரன்,adhik ravichandran vishal about silk smitha in mark antony | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து அதிரடி ஆக்சன் படங்களில் நடித்து வரும் நடிகர் விஷால் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அட்டகாசமான இரட்டை வேடங்களில் விஷால் மற்றும் SJ.சூர்யா இருவரும் இணைந்து நடித்திருக்கும் இந்த மார்க் ஆண்டனி திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. பக்கா மாஸ் ஆக்சன் என்டர்டெய்னர் படமாக ரசிகர்கள் கொண்டாடி வரும் இந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தில் சர்ப்ரைஸாக தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நடிகையான சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தை அவரைப் போன்றே உருவ ஒற்றுமை கொண்ட ஒரு நடிகை மற்றும் CG உதவியுடன் பட குழுவினர் ட்ரீட்டாக கொடுத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நமக்கு கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற நடிகர் விஷால் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் அவர்களிடம் மார்க் ஆண்டனி படத்தில் இடம் பெற்றிருக்கும் சில்க் ஸ்மிதா கதாபாத்திரம் குறித்து கேட்டபோது, “ஸ்கிரிப்டில் தானாகவே அந்த கதாபாத்திரம் அமைந்துவிட்டது. சில்க் ஸ்மிதா , ஆண்டனி கதாபாத்திரத்தை சந்தித்தால் எப்படி இருக்கும், ஆண்டனிக்கும் சில்க் ஸ்மிதாவுக்கும் ஒரு உரையாடல் பக்கத்தில் நம்முடைய ஜாக்கி பாண்டியன் இருக்கிறார். இது தானாகவே வந்துவிட்டது இந்த கதைக்குள்... அது படிக்கும் போதே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது சொல்லும்போது ஒவ்வொருத்தரும் மிகவும் உற்சாகமடைந்தார்கள். எழுதிவிட்டோம் பேசி விட்டோம் ஆனால் இதை எப்படி படமாக்க போகிறோம் என்று இருந்தோம். சில்க் ஸ்மிதா போன்ற உருவ ஒற்றுமை கொண்ட ஒருவர் இருந்தார். இன்ஸ்டாகிராமில் கொஞ்சம் ஃபேமஸாக இருந்தார்கள். அவர்களை அழைத்து வந்து லுக் டெஸ்ட் செய்து அவர்களுக்கு ஆடிஷன் எல்லாம் வைத்து அந்த கதாபாத்திரத்திற்காக கொஞ்சம் தயார் செய்தோம் அவரும் ஏற்கனவே கொஞ்சம் தயாராகி இருந்தார். பின்னர் கொஞ்சம் CG செய்தோம்" என்றார். 

தொடர்ந்து பேசிய நடிகர் விஷால், “இது 60 - 40 என்று சொல்லலாம். தயாரிப்பாளருக்கு தான் பாராட்டுகளை சொல்ல வேண்டும். இதற்காக நீங்கள் எல்லோரும் எங்களுக்கு கைத்தட்டுகிறீர்கள் இதற்கு உண்மையிலேயே நீங்கள் கைதட்ட வேண்டியது தயாரிப்பாளருக்கு தான். ஆதிக் ரவிச்சந்திரன் பெரிய பட்ஜெட் படம் அந்த ஒரு போர்ஷனுக்கு மட்டும் நிறைய செலவானது. அந்தப் பல் முதற்கொண்டு பார்த்து செய்ய வேண்டும். இவர் மிகவும் பர்ஃபெக்க்ஷன்னிஸ்ட். இது நன்றாக இருக்கிறது என்று சொன்னாலும், “இல்லை அண்ணா இன்னும் இருக்கு” என்று சொல்வார்." என்றதும், இடையில் பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், “வேறு ஏதாவது இருந்தால் பரவாயில்லை இது தலைவி தலைவியை கை வைக்கும் போது ஏதாவது ஆகிவிட்டால் அவ்வளவு தான்" என சொன்னதும், "தலைவி மேல கை வெச்சா நானே உன்ன அடிப்பேன்” என நடிகர் விஷால் சொன்னார். தொடர்ந்து பேசிய இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன், “தலைவி மேல் கை வைக்கிறேன் என சொல்லவில்லை அந்த கேரக்டரை சொல்கிறேன் அது மிகவும் முக்கியமானதாக இருந்தது. எல்லோரும் சர்ப்ரைஸாகி விட்டார்கள்.” என்றார். அந்த முழு பேட்டி இதோ...