"மார்க் ஆண்டனி படத்தின் ஒரிஜினல் ஒன் லைன் என்ன?"- முதல் முறை மனம் திறந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்! வைரல் வீடியோ

மார்க் ஆண்டனி படம் ஒரிஜினல் ஒன் லைன் பற்றி பேசிய ஆதிக் ரவிச்சந்திரன்,director adhik ravichandran about original one line of mark antony | Galatta

நடிகர் ஜீவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்த திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். தொடர்ந்து நடிகர் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் எனும் திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து இயக்கிய பஹீரா திரைப்படம் நீண்ட காத்திருப்பதற்குப் பிறகு இந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரிலீஸ் ஆனது. இந்த வரிசையில் இயக்குனர் ஆதிக்க ரவிச்சந்திரனின் அடுத்த படைப்பாக தற்போது வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அட்டகாசமான மாஸ் காமெடி ஆக்சன் என்டர்டைனர் படமாகவும் டைம் டிராவல் கான்செப்டில் கேங்ஸ்டர் படமாக வந்திருக்கும் இந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

மார்க் மற்றும் ஆண்டனி என்கிற தந்தை - மகன் இன்னும் இரட்டை வேடங்களில் விஷாலும், ஜாக்கி பாண்டியன் மதன்பாண்டியன் எனும் தந்தை மகன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் அதகளப்படுத்தி இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் இந்த வருடத்தின் பக்கா என்டர்டைனிங் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக இடம் பிடித்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனல் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு சிறப்பு நேர்காணலில் பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் நம்மோடு பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், மார்க் ஆண்டனி படத்தில் மிகவும் சர்ப்ரைஸாக இருந்தது என்னவென்றால், இந்த காலகட்டத்தில் எல்லோரும் மாஸ் படங்கள் எடுக்கிறார்கள் ஹீரோவை ஷோகேஸ் பண்ணும் படங்களை எடுக்கிறார்கள் அதுவும் சரிதான் அதற்கென ஒரு மிகப்பெரிய ஃபேன் பேஸ் இருக்கிறது. நம்முடைய வழக்கமான மசாலா படங்கள் அப்பாவை கொன்று விட்டாய் என பழி வாங்குவது, அது மாதிரியான ரிவெஞ்ச் படங்கள் கம்மியாக்கிக் கொண்டே போகிறது. எனக்கு படமாக வேண்டாம் ஒரு 15 மாஸ் மொமென்ட்கள் இருந்தால் போதும் இருந்தால் போதும்… அந்த மாதிரி போகிற காலகட்டத்தில் நீங்கள் மிகவும் சாலிடான மசாலா கதையை அடித்தளமாக வைத்து அதன் மீது ஜோக்கை வைத்திருக்கிறீர்கள் அதனால் தான் அந்த ஜோக்குகள் சரியாக ஒர்க் ஆகியிருக்கின்றன. மார்க் ஆண்டனி படத்தினுடைய ஒரிஜினல் ஒன் லைன் என்ன?" எனக் கேட்டபோது, 

“ஒரிஜினல் ஆன்லைன் அது தான் ஒரு அப்பாவை பையன் காப்பாற்ற வேண்டும். 1995ல் இருக்கும் ஒரு பையன் 1975ல் இறந்து போன தனது அப்பாவை காப்பாற்ற வேண்டும். ஒரு டைம் டிராவல் கதை ஆனால் ஃபிசிக்கலாக அவன் டைம் டிராவல் பண்ணக்கூடாது. அது மட்டும் தான் முதலில் ஐடியாவாக வந்தது. எல்லா படங்களிலும் பிசிக்கலாக டைம் டிராவல் செய்த அந்த இடத்திற்கு போய் வருவார்கள். ஆனால் எனக்கு அப்படி இருக்கக் கூடாது. என்ன செய்வது என யோசித்த போது தான் அப்படி ஒரு போனை சிரஞ்சீவி என்று ஒருவர் கண்டுபிடிக்கிறார் என ஆரம்பமானது.” என பதில் அளித்துள்ளார் இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.