தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு திரைப்படம் வருகிற நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனையடுத்து 3-வது முறையாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் வெந்து தணிந்தது காடு மற்றும் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகும் பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நடிகர் சிலம்பரசன்.

முன்னதாக இயக்குனர் ராஜேஷ் கண்ணா இயக்கத்தில், ஃபாகஸ் க்ரோ ஸ்டுடியோஸ் மற்றும் GVKM எலிஃபன்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில், வினோத் மோகன் மற்றும் பிந்துமாதவி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள மாயன் திரைப்படத்தில் “மச்சி” என்ற பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார். 

பிரபல இசையமைப்பாளர் M.S.ஜோன்ஸ் ருபெர்ட் இசையில் “மச்சி” பாடலை நடிகர் சிலம்பரசன் உடன் விஜய் டிவியின் சிவாங்கியும் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிலம்பரசன்-சிவாங்கி காம்போவின் கலக்கலான இந்த மச்சி பாடல் தற்போது வெளியானது.அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்