தமிழ் சினிமாவின் இன்றியமையாத நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. கோலிவுட் மட்டுமல்லாமல் மாலிவுட் , டோலிவுட், பாலிவுட் என அனைத்து திரையுலகிலும் கலக்கி வருகிறார். அடுத்ததாக மலையாளத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 19(1)(a) திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது

முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகர் சூரியுடன் இணைந்து விஜய் சேதுபதி விடுதலை திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மக்கள் செல்வன்.

அடுத்தடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல்,ஃபேம்லி மேன் இயக்குனர்கள் இயக்கும் ஹிந்தி வெப்சீரிஸ்,காந்தி டாக்ஸ் எனும் மௌனப்படம் என தொடரும் விஜய்சேதுபதியின் படங்களின் வரிசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வருகிறது VJS46.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுகிரீதி கதாநாயகியாக நடிக்க விஜய் டிவி புகழ் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகை அனுகிரீதி வாஸ் VJS46 படத்தின் டப்பிங் பணிகளை இன்று தொடங்கியுள்ளார். எனவே VJS46 படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதால் விரைவில் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது