கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து , தென்னிந்தியாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அஞ்சலி.அங்காடி தெரு,எங்கேயும் எப்போதும்,கலகலப்பு என வரிசையாக ஹிட் படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அஞ்சலி.

தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் அஞ்சலி.தமிழில் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து தென்னிந்திய முழுவதும் பிரபலமான நடிகையாக மாறினார் அஞ்சலி.

அடுத்ததாக நிவின் பாலி-ராம் படம்,ஷங்கர்-ராம்சரண் படம் உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிதின் நடித்து சூப்பர்ஹிட் ஆன படம் Macherla Niyojakavargam.க்ரிதி ஷெட்டி,கேத்தரின் தெரசா உள்ளிட்டோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.இந்த படத்தில் அஞ்சலி RaRa Reddy I Am Ready என்ற ஸ்பெஷல் பாடலில் தோன்றுகிறார்.

இந்த பாடல் லிரிக் வீடியோ பெரிய ஹிட் அடித்திருந்தது.பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த பாடல் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வரும் இந்த வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்