தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பும் விதவிதமான த்ரில்லர் திரைப்படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் நடிகர் அருள்நிதி. அந்த வகையில் இந்த ஆண்டு அருள்நிதி நடிப்பில் இதுவரை வெளிவந்த D-BLOCK மற்றும் தேஜாவு ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றன.

அடுத்ததாக நடிகை ஜோதிகா நடித்த ராட்சசி திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் பெரிய மீசையுடன் மிரட்டலான புதிய கெட்டப்பில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதனிடையே  இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் அடுத்த த்ரில்லர் படமாக அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் டைரி.

காவல்துறை அதிகாரியாக அருள்நிதி நடித்துள்ள டைரி திரைப்படத்தில் பவித்ரா கதாநாயகியாக நடிக்க, ஆடுகளம் கிஷோர், ஜெயப்பிரகாஷ் மற்றும் ஷா ரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ள, டைரி திரைப்படத்திற்கு ராஜா சேதுபதி படத்தொகுப்பு செய்ய, ரான் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார்.

FIVE ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் அவர்கள் தயாரித்துள்ள டைரி திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட வருகிற ஆகஸ்ட் 26-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் டைரி திரைப்படத்திலிருந்து ராசாதி ராசன் பாடல் லிரிக் வீடியோ வெளியானது. அந்த ராசாதி ராசன் பாடல் லிரிக் வீடியோ இதோ…