சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக சீயான் விக்ரமுடன் இணைந்துள்ள இயக்குனர் பா.ரஞ்சித் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். கே.ஜி.எஃப்-ஐ கதை களமாக கொண்டு 3Dல் தயாராகும் பிரம்மாண்டமான இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

முன்னதாக வழக்கமான தனது தொழில்நுட்ப கலைஞர்கள் அணியுடன் இல்லாமல் முழுக்க முழுக்க புது அணியுடன் இணைந்த இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து வழங்கும் மிக அழுத்தமான அரசியல் கொண்ட வித்தியாசமான கதைக்களத்தோடு அழகிய காதல் திரைப்படமாக உருவாகியிருக்கும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் கட்டாயமாக ஆரோக்கியமான பல விவாதங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் மற்றும் “டான்சிங் ரோஸ்” ஷபீர் உட்பட பல நடிகர்கள் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் நடித்துள்ளனர். கிஷோர் குமாரின் ஒளிப்பதிவில், நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளள்ளார். சில தினங்களுக்கு முன் வெளியான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் ட்ரைலர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதனையடுத்து நேற்று ஆகஸ்ட் 22ஆம் தேதி நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் படக்குழுவினர் உட்பட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது. அந்த பாடல்கள் இதோ…