சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக திகழ்ந்து வருபவர் க்ரித்திகா.சன் டிவியில் ஒளிபரப்பான தேனிலவு தொடர் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து பொன்னுஞ்சல்,பைரவி,சந்திரலேகா,வள்ளி,வாணி ராணி என பல சீரியல்களில் நடித்து அசத்தினார்.

அடுத்தாக ஜீ தமிழில் ஒளிபரப்பான தேவதையை கண்டேன் தொடர் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்க்க தொடங்கினார் க்ரித்திகா,இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளம் உருவானது.இதனை அடுத்து இவர் பூவே பூச்சூடவா தொடரில் இரண்டாவது நாயகியாக நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார்.

இவற்றை தவிர இனிமே இப்படித்தான்,சென்னை 28 2ஆம் பாகம்,முத்தின கத்திரிக்கா,மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.சமீபத்தில் ஜீ தமிழில் தொடங்கிய அன்பே சிவம் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் க்ரித்திகா.

தற்போது இவரது ரசிகர்களுக்கு சோகமளிக்கும் விதமாக ஒரு செய்தி கிடைத்துள்ளது.க்ரித்திகாவின் தனது தந்தை மறைந்துவிட்டார் என்ற துக்க செய்தியை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.க்ரித்திகாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

anbe sivam serial actress krithika laddu father passes away poove poochudava