புதிய காதலுடன் புத்துணர்வான புகைப்படத்தை பகிர்ந்த நடிகை அமலா பால் !
By Sakthi Priyan | Galatta | July 11, 2020 11:15 AM IST
தமிழ் திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையில் கால்பதித்த இவருக்கு மைனா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கடைசியாக இவரது நடிப்பில் ஆடை திரைப்படம் வெளியானது. தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் மும்பையை சேர்ந்த பவ்நிந்தர் சிங் எனும் பாடகரை திருமணம் செய்துகொண்டார்.
கொரோனா காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் சொந்த ஊரில் இருக்கும் அமலா பால், சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு நண்பர்களுடன் வேட்டி சட்டையில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டார். பதிவு செய்த சில நொடிகளிலேயே அந்த புகைப்படம் பட்டி தொட்டியெங்கும் வைரலானது. அதன் பின் நண்பரின் பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை
ஆம், அமலா பால் தனது லவ்வர் டேனியல் வெல்லிங்டன் என குறிப்பிட்டு இருப்பது அவர் கையில் அணிந்திருக்கும் அந்த காஸ்ட்லியான வாட்ச்சை தான். பிரபல கைக்கடிகார பிராண்டான டேனியல் வெல்லிங்டனின் புதிய லுமின் வாட்சை அணிந்து கொண்டு Im in love with danielwellington என பதிவிட்டுள்ளார்.
நடிகை அமலா பாலின் இப்படியொரு அம்சமான போட்டோஷூட் புகைப்படத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த ரசிகர்கள், எக்கச்சக்கமாக லைக்குகளை குவித்தும், கமெண்ட்டுகளை போட்டும் வருகின்றனர். செக்ஸி லேடி, பிளாக் அண்ட் ரெட் பியூட்டி, கேட் உமன் என ஏகத்துக்கும் வர்ணித்து வருகின்றனர்.
அதோ அந்த பறவை போல எனும் படத்தில் நடித்துள்ளார் அமலா பால். செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரித்த இந்த படத்தை அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அடர்ந்த காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய திரில்லர் கதையாக உருவாகியுள்ளது இந்த படம். இந்த படம் ஓடிடி-ல் வெளியாகுமா அல்லது லாக்டவுன் முடிந்து வெளியாகுமா என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
Samantha undergoes treatment - New Viral Video! Check Out!
11/07/2020 12:00 PM
Sivakarthikeyan film's director warns people about a fake fraud scam!
11/07/2020 10:32 AM
Bharath's next film - Naduvan Official Trailer | Popular actor turns director!
10/07/2020 07:07 PM
Thalapathy Vijay is a big fan of Thala! Check Out this new viral video!
10/07/2020 06:33 PM