தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன்பிறவா அண்ணனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். விஜய் எனும் மூன்றெழுத்து மந்திரம், தமிழ் திரையுலகின் தாரக மந்திரமாக ஒலிக்கிறது. படத்திற்கு படம் அவரது பாக்ஸ் ஆபீஸ் வசூல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல இயக்குனர்களின் ஆதர்ஷ நாயகனாக இருந்து வருகிறார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் என்ற ருசிகர செய்தியை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உறுதி செய்தார். 

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் தளபதி விஜய். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனாவின் நேர்காணலில் பேசிய நடிகர் சதீஷ் தளபதியின் கிரிக்கெட் ஆர்வம் பற்றி பகிர்ந்து கொண்டார். பைரவா படத்தின் படப்பிடிப்பின் போது உடன் இருந்ததால் எனக்கு தெரியும். அவரது மகன் சஞ்சய்காகவே அதிகமாக கிரிக்கெட் பார்ப்பாராம். சஞ்சய் கிரிக்கெட் பிரியர் என்பதால் இவருக்கு அந்த ஆர்வம் வந்திருக்கும் என்று பேசியுள்ளார். 

சென்னை அணியின் தூதராக தளபதி விஜய் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி பிரபலமாவதற்கு தளபதி விஜய்யும் ஒரு காரணம். அந்த சீசனில் நடக்கும் போட்டியை காண தளபதி விஜய் தன் மகன் சஞ்சய்யுடன் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வருவது அனைவரும் அறிந்ததே. 

தளபதியின் மகனான சஞ்சய் ஆங்கில குறும்படமான ஜங்ஷன் படத்தில் நடித்திருந்தார். இதில் அவரது நண்பர்களான கவியன், ரோஹித், அஸ்வின், கோகுல் ஆகியோருடன் இணைந்து நடித்து அசத்தினார். இப்படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் அவரே இயக்கியிருந்தார். அதன் பின் நிகழ்ச்சி தொகுப்பாளராக உருவெடுத்த சஞ்சய் சில நாட்கள் கழித்து Siri எனும் குறும்படத்தை இயக்கி நடித்தார். இவர் விரைவில் திரையுலகில் கால்பதித்து தனது தந்தைக்கும், தமிழ் திரைக்கும் பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.