கொரோனாவின் இரண்டாம் அலையில் பாலிவுட் பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 2ம் தேதி தெரிய வந்தது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். குவாரன்டைனில் இருந்தபோது அவ்வப்போது செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தார். 

இந்நிலையில் தனக்கு நெகட்டிவ் என வந்துவிட்டதாக கடந்த 15ம் தேதி தெரிவித்தார் ஆலியா. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமான வேகத்தில் தன் காதலரான நடிகர் ரன்பிர் கபூருடன் மாலத்தீவுகளுக்கு கிளம்பிவிட்டார். ஆலியா பட்டும், ரன்பிர் கபூர் ஒரே நிறத்தில் உடை அணிந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து தான் ஆலியா மாலத்தீவுகளுக்கு கிளம்பியிருக்கிறார்.

அதை பார்த்தவர்களோ, என்ன தான் குணமாகிவிட்டாலும், இப்படியா உடனே வெளியே வருவது. இது மற்றவர்களுக்கு பாதுகாப்பு இல்லையே என தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு இடையே பாலிவுட் பிரபலங்கள் பலர் மாலத்தீவுகளுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

முன்னதாக ரன்பிர் கபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தார். ரன்பிருக்கு முன்பு அவரின் அம்மாவும், நடிகையுமான நீத்து கபூருக்கு கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்டது. கெரியரை பொறுத்த வரை ஆலியா பட் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடித்துள்ளார். அந்த படம் ஜூலை மாதம் 30ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. மேலும் ராஜமவுலியின் இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துள்ளார்.