தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திர ஜோடிகளில் முதன்மையானவர்கள் ‘அஜித் – ஷாலினி’ தம்பதி. தான் ‘வேண்டவே வேண்டாம்’ என்று கூறினாலும் ரசிகர்களால் எப்போதும் அன்போடு ‘தல’ என்று அழைக்கப்படும் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துவிட்டாலே, அது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் பெரிதும் தலைகாட்ட விரும்பாத அஜித், அவ்வப்பொழுது தனது பைக் பயண புகைப்படங்களை வெளியிடுவதே அவரது ரசிகர்களுக்கு ஒரே விருந்து. அந்த விதத்தில் அண்மையில் அவர் காஷ்மீர், லடாக் போன்ற இடங்களுக்கு பைக் ரைடிங் சென்று அதன் படங்களை வெளியிட்டது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

அஜித் நடித்து பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘துணிவு’. ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அஜித்துடன், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொகெய்ன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பெரும் காத்திருப்புகளுக்கு மத்தியில் பொங்கல் விருந்தாக ஜனவரி 12-ல் வெளியாகவிருக்கும் இத்திரைப்படம், வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு தயாராகியிருக்கிறது. மேலும் அஜித்தின் மாஸ் ஆக்ஷன் காட்சிகளைக் கோர்வையாகக் கலந்துகட்டி வெளிவரவிருக்கிறது.

இந்நிலையில் தான், கடந்த டிசம்பர் 31-ல் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. எதிர்பார்த்தது போன்றே மாஸ் சண்டைக்காட்சிகளுடனும், தெறிக்கவிடும் சேசிங் காட்சிகளுடனும் ‘துணிவு’ டிரெய்லர் வெளியாகியுள்ளது. வங்கிக் கொள்ளையில் அஜித் ஈடுபடுவது போல் அமைக்கப்பட்டுள்ள காட்சிகளில் அஜித் நையாண்டியும், கிண்டலுமாகப் பேசும் வசனங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. மேலும் அதில் அவர் நடனம் ஆடுவது, நக்கலாகச் சிரிப்பது, துப்பாக்கிகளால் ஸ்டைலாக எதிராளிகளைச் சுடுவது போன்றவையும் ‘ச்ச… கியூட் ல’ என்று கவனம் ஈர்த்துள்ளன. தற்சமயம் வரை இதன் டிரெய்லர் யூடியூபில் 35 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. டிரெய்லரில் காணப்படும் துள்ளலான அஜித்தை படம் நெடுகிலும் காணமுடிந்தால் ரசிக்கத்தக்கதாக இருக்கும் என்பது அஜித் ரசிகர்களின் ஆவலான எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சுவாரியரின் ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இதனிடையே, தன்னுடனும், மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடனும் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறி அவர் பதிவிடுட்டுள்ள அப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தாண்டு வாழ்த்தும் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஷாலினி பதிவிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துப்பதிவு உங்கள் பார்வைக்கு…

 

 

View this post on Instagram

A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)