“அப்பாகிட்ட மட்டும் தான் இதை சொல்ல முடியும்” ரகசியத்தை உடைத்த ஜெயம் ரவி - கலகலப்பான நேர்காணல் இதோ..

ஜெயம் ரவி மற்றும் அவரது  மனைவி கலந்து கொண்டு பகிர்ந்த கலகலப்பான பேட்டி இதோ - Actor Jayam ravi shares his fun side face | Galatta

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவரனாவர் நடிகர் ஜெயம் ரவி. முதல் படம் தொடங்கி இன்று வரை தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையிலான படங்களில் நடித்து வருகிறார். அட்டகாசமான நடிப்பிற்கே தனி ரசிகர் கூட்டம் தற்போது உருவாக்கி வைத்துள்ளார். இவர் நடிப்பில் முன்னதாக கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியானது. மிக பிரம்மாண்டமாக உருவான அந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி கொண்டாட்டத்தின் இடையே ஜெயம் ரவி அவர்களின் நடிப்பும் அதிகம் பேசப்பட்டது. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28 ம் தேதி வெளியானது. ரசிகர்களின் பெரும் ஆதரவோடு வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் ஜெயம் ரவியை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே ஜெயம் ரவி நடிப்பில் ‘அகிலன்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வெற்றிகளுடன் வலம் வரும் ஜெயம் ரவி தற்போது என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அகமத் அவர்களின் இயக்கத்தில் ‘இறைவன்’ படத்தில் நடித்து வருகிறார். அதன்பின் இயக்குனர் ராஜேஷ் அவர்களுடன் கூட்டணி அமைக்கவுள்ளார்.

ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று தற்போது தமிழ் சினிமாவில் பேசு பொருளாக வலம் வரும் ஜெயம் ரவி அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் தனது குடும்பத்தாரோடு கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதனிடையே நமது கலாட்டாவின் வாழ்வியலை பதிவு செய்யும் கலாட்டா ரிட்ஸ் சேனலின் சிறப்பு பேட்டியில் தனது மனைவி ஆர்த்தியுடன் கலந்து கொண்ட அவர் தம்பதியினருக்கிடையேயான புரிதலுக்குரிய 20 கேள்விகளுக்கு விடையளித்தனர். அதில்,

யாருடைய தொலைபேசி அழைப்பை நிரகாரிப்பீர்கள்.. அப்படி நிராகரித்து ‘தூங்கிட்டேன்’ என்று காரணம் சொல்வீர்கள் என்ற கேள்வி நடிகர் ஜெயம் ரவி அவர்களிடம் கேட்கப்பட்டது.   "அப்பாகிட்ட தான் தூங்கிட்டேன்னு சொல்வேன்..  வேற வழியில்லை.. தப்பிக்க.. சின்ன சின்னதா தப்பு பண்ணிட்டு அப்பா போன் பண்ணா இது போல சொல்றது.. பொதுவாகவே அப்பாவ நேரா பார்க்க மாட்டேன். போன் பன்றதுலாம் அப்பறம்‌.. வந்தாலே ஓடி போயிடுறது.. இந்த மாதிரி லாம் பண்ணுவன். அவரை தாண்டி வேலையில் இருக்கும்போது வீட்டு கால் எதுவா இருந்தாலும் எடுக்க மாட்டேன். வீட்ல இருந்தா வேலையில இருந்து வர கால் எடுக்க மாட்டேன்.." என்றார்.

பின் தொடர்ந்து, பிடித்தமான தவறான பழக்கம் குறித்து ஆர்த்திஅவர்களிடம் கேட்கப்பட்டது,  "நான் நடுராத்திரியில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவேன்.‌ திடீரென எதாவது தோணும் போது சாப்பிடுவேன்." என்றார். ஜெயம் ரவியிடம் கேட்கும் போது, ஆர்த்தி அதற்கு பதிலளித்தார் "அவருக்கு இனிப்பு என்றால் பிடிக்கும். இரவு நேரத்தில் விளக்கு எல்லாம் அனைத்து விட்டு 2,3 மணி இருக்கும் அப்போதா ஒரு பெரிய ஐஸ் எடுத்து வைத்து கொண்ணு ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டு கொண்டு இருப்பார்." என்றார் ஆர்த்தி. அதன்பின் ஜெயம்ரவி, "கோலா இருந்தா இரண்டு கையிலும் எடுத்து குடிப்பேன். கடவுள் இரண்டு கை கொடுத்துருக்காரு ல அதான் ரெண்டு கைல குடிப்பேன்."  என்றார். பின் தொடர்ந்து பிடித்த உணவு குறித்து ஆர்த்தி, "அம்மா எது செஞ்சாலும் அது எனக்கு பிடித்த உணவு தான்.." என்றார். ஜெயம் ரவி , "மேகி சாப்பிடுவேன். அப்படி இல்லனா பாப் கார்ன்.." என்றார். பின் அவரை தொடர்ந்து ஆர்த்தி “அவர் மேகி நன்றாக சமைப்பார்..  அதில் நிறைய செய்வார். அது அப்படி பண்ணனும் இது இப்படி பண்ணனும் னு சொல்லுவார். “ தொடர்ந்து ஜெயம் ரவி, "எது பண்ணாலும் சரியா பண்ணனும் ல" என்றார். பின் பிடித்தமான உணவகம் குறித்து கேட்கையில், ஜெயம் ரவி, "நாங்க அடிக்கடி போற இடம் லீலா பேலஸ்அங்க சைனா உணவகம் போவோம். " என்றார்.

ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோவை காண.. 

 

சினிமா

"குழந்தை பிறந்த போது நான் முதல்ல கேட்ட கேள்வி இதுதான்" ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்யமான தருணம் - முழு வீடியோ இதோ..

ட்விட்டரில் இருந்து விலகிய சிவகார்த்திகேயன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

ட்விட்டரில் இருந்து விலகிய சிவகார்த்திகேயன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – வைரலாகும் பதிவு இதோ..

AK62 Update.. கொண்டாட்டத்திற்கு ரெடியா..! அஜித் பிறந்தநாளுக்கு அட்டகாசமான Treat.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. விவரம் இதோ..
சினிமா

AK62 Update.. கொண்டாட்டத்திற்கு ரெடியா..! அஜித் பிறந்தநாளுக்கு அட்டகாசமான Treat.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. விவரம் இதோ..