தனது சிறந்த நடிப்பால் தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி சமீபத்தில் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளிவந்து ப்ளாக பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது இதயங்களிலும் கொள்ளையடித்தார்.

முன்னதாக தெலுங்கில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்த அம்மு திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீசாகி பலரது கவனத்தை வெகுவாக ஈர்த்தது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடிகர் விஷ்ணு விஷால் உடன் இணைந்து கட்டா குஸ்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி.

அடுத்ததாக நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கேங்ஸ்டர் படமாக தயாராகும் கிங் ஆஃப் கோத்தா படத்திலும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த வரிசையில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிப்பில் அடுத்து வெளிவர தயாராகியுள்ள திரைப்படம் குமாரி. பிரித்விராஜ் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் தி ஃப்ரஷ் லைம் சோடாஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிடும் குமாரி திரைப்படத்தை நிர்மல் சஹாதேவ் இயக்கியுள்ளார்.

ஆபிரகாம் ஜோசப் ஒளிப்பதிவில் ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ள குமாரி திரைப்படம் வருகிற அக்டோபர் 28ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் குமாரி திரைப்படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் சற்று முன்பு வெளியானது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அந்த ட்ரைலர் இதோ…