தன்னிகரற்ற நடிகராக படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து மிகச்சிறப்பாக நடித்து அனைத்து ரசிகர்களின் மனதிலும் தனி சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் சீயான் விக்ரம் சமீபத்தில் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக பிரமிப்பின் உச்சமாக வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவரும் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல் முறையாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கேஜிஎஃப் கதை களத்தை மையப்படுத்தி பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் புதிய சீயான்61 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து வழங்கும் இத்திரைப்படத்திற்கு தங்கலான் என பெயரிடப்பட்டுள்ளது. சீயான் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கிஷோர் குமார் ஒளிப்பதிவில் செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் தங்கலான் திரைப்படத்தின் டைட்டிலை அறிவிக்கும் வகையில் பிரத்தியேகமான டீசர் தற்போது வெளியானது. மிரட்டலான புதிய அவதாரத்தில் சீயான் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் டீசர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அட்டகாசமான அந்த டீசர் இதோ…
 

Behold! Witness #ChiyaanVikram in #PaRanjith's #Thangalaan ✨Produced by #KEGnanavelRaja

A #GVPrakashKumar Musical@Thangalaan @chiyaan @beemji @kegvraja @StudioGreen2 @officialneelam @parvatweets @MalavikaM_ @PasupathyMasi @thehari___ pic.twitter.com/Tprwp4c0rc

— Studio Green (@StudioGreen2) October 23, 2022