சின்னத்திரை ரசிகர்களின் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9-ம் தேதி  கோலாகலமாக தொடங்கியது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல்முறையாக 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

GP முத்து (யூட்யூபர்), அஸீம் (சீரியல் நடிகர்), அசல் கோலார் /வசந்த் (இசைக்கலைஞர் / பாடகர்), ஷிவின் கணேசன் (திருநங்கை - பொது ஜனம்), ராபர்ட் மாஸ்டர் (நடன இயக்குனர்), ஷெரினா (மாடல்), ராம் ராமசாமி (மாடல் / நடிகர்), ஜனனி (இலங்கை - செய்தி வாசிப்பாளர்), ADK-ஆர்யன் தினேஷ் கனகரத்னம் (இலங்கை - இசைக்கலைஞர் / RAP பாடகர்), அமுதாவாணன் (STAND UP காமெடியன் / நடிகர்), VJ மகேஷ்வரி (தொகுப்பாளர் / நடிகை), VJ கதிரவன் (தொகுப்பாளர்), ஆயிஷா (சீரியல் நடிகை), தனலக்ஷ்மி (டிக்டாக்கர் - பொது ஜனம்), ரச்சிதா மகாலக்ஷ்மி (சீரியல் நடிகை), மணிகண்டா ராஜேஷ் (நடிகர் -ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர்), சாந்தி அரவிந்த் (நடன இயக்குனர் / நடிகை), விக்ரமன் (அரசியல்வாதி-விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பேச்சாளர்) / முன்னாள் அரசியல் தொகுபாளர் -கலாட்டா), குயீன்ஸ் ஸ்டான்லி (வளரும் நடிகை), நிவிஷினி (சிங்கப்பூர் மாடல் - பொது ஜனம்) ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்துள்ளனர்.

மேலும் முதல் வார இறுதியிலேயே முதல் WILD CARD என்ட்ரியாக பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி களமிறங்கினார். இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தனது குழந்தைகளின் மீது கொண்ட அளவுகடந்த பாசத்தால் அவர்களை காண விரும்பி மிகுந்த மனவேதனையில் இருந்த GP.முத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ரசிகர்களின் ஃபேவரட் போட்டியாளரான GP.முத்து இப்படித் திடீரென்று வெளியேறியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் EVICTION RESULT தற்போது வெளியாகியுள்ளது. பிரபல நடன இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலமடைந்து பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்ட சாந்தி அவர்கள் பிக் பாஸ் தமிழ் சீசன் 6-ன் முதல் ELIMINATION-ல் EVICT-ஆகி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.