தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில் சீயான் விக்ரமுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த துருவநட்சத்திரம் திரைப்படம் நீண்ட காத்திருப்புக்கு பிறகு அடுத்த சில மாதங்களுக்குள் வெளியாகும் என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

முன்னதாக விஷ்ணு விஷால் உடன் மோகன்தாஸ், ஒரு நாள் கூத்து , மான்ஸ்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஃபர்ஹானா, ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் தீயவர் கொலைகள் நடுங்க மற்றும் SG.சார்லஸ் இயக்கத்தில் சொப்பன சுந்தரி என ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள வரிசையாக திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. 

இந்த வரிசையில் அடுத்ததாக வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திரைப்படம் டிரைவர் ஜமுனா. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் டிரைவர் ஜமுனா படத்திற்கு அனல் அரசு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். கோகுல் பெண்டி ஒளிப்பதிவில் ராமர் படத்தொகுப்பு செய்திருக்கும் டிரைவர் ஜமுனா படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

டிரைவர் ஜமுனா திரைப்படத்தை 18 ரீல்ஸ்ஸ் சார்பில் S.P.சௌத்ரி தயாரித்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் டிரைவர் ஜமுனா படத்தின் சென்சார் & ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியானது. வருகிற நவம்பர் மாதம் டிரைவர் ஜமுனா திரைப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருக்கும் நிலையில் டிரைவர் ஜமுனா திரைப்படத்திற்கு சென்சார் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

It's U/A for @aishu_dil's #DriverJamuna 🚖 - Releasing in theatres from November.@kinslin @SPChowdhary3 @18Reels_ @GhibranOfficial @gokulbenoy #AnlArasu @thinkmusicindia #RRamar @ThatsKMS @ahatamil @reddotdzign1 @Synccinema @knackstudios_ pic.twitter.com/mmJCplVvuv

— Yuvraaj (@proyuvraaj) October 22, 2022