நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமான நடிகை வித்யூலேகா ராமன், நடிகர் மோகன் ராமன் அவர்களின் மகள் ஆவார்.துணை & நகைச்சுவை நடிகையாக தமிழில், தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், வேதாளம், காக்கி சட்டை, பவர் பாண்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகை வித்யூலேகா ராமனுக்கு திருமணம் நடைபெற்றது. முன்னதாக பருமனான உடல் தோற்றத்துடன் இருந்த வித்யூலேகா கடினமான உடற் பயிற்சிகளுக்கு, பிறகு தனது உடல் எடையில் கிட்டத்தட்ட பாதியை குறைத்து பலரையும் ஆச்சரியப்பட வைத்தார். இவரது இந்த ட்ரான்ஸ்லஷன் பலரது பாராட்டுகளையும் பெற்றது. 

இந்நிலையில் வித்யூலேகா நேற்று தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். கடற்கரையில் நீச்சல் உடையில் இருக்கும் இந்த புகைப்படம் பற்றி பலர் மோசமாக மெசேஜ்கள் அனுப்பியுள்ளனர். அவர்களுக்கு வித்யூலேகா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில்,எப்போது எனது விவாகரத்து என பல மெசேஜ்கள் வருகின்றன... நான் நீச்சல் உடை அணிந்ததற்காகவா? அருமை!!..1920 காலத்திலிருந்து 2021-க்கு வாருங்கள்… எதிர்மறை கமெண்ட்டுகள் இங்கே பிரச்சனையில்லை... ஆனால் ஒரு பெண்ணின் உடை அவளது விவாகரத்தை முடிவுசெய்யும் என்ற மனநிலையில் இருக்கும் இந்த சமூகத்தில் சரியாக உடை அணிந்த அனைவரது திருமண வாழ்வும் நன்றாக இருக்கிறதா?”
 
“பக்குவத்தோடு இருக்கும் கணவரை அடைந்ததில் மிகுந்த அதிர்ஷ்டமாகவும் பாதுகாப்பாகவும் உணர்கிறேன்… அவர் இந்த பிரச்சனையை கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல சொல்கிறார்... ஆனால் என்னால் அவ்வளவு எளிதில் இதை கடந்து செல்ல முடியாது…” “HATERS-க்கு ஒன்றை சொல்கிறேன்.- உங்கள் விஷத்தன்மை வாய்ந்த மனநிலையை நான் மாற்ற முடியாது... பெண்களையும் அவர்களின் தனித்துவத்தையும் அடிமைப்படுத்த கூடிய வெளிப்படையாக அவமதிக்க கூடிய உங்களது பாலினவாதத்திற்கு எதிராக உங்கள் வாழ்கையில் இருக்கும் பெண்கள் நிற்பார்கள்... என நான் நம்புகிறேன்...வாழு & வாழ விடு”
 என பதிவிட்டுள்ளார்.

actress vidyullekha raman slipper shot reply to the haters in instagram