தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.டாக்டர்,அயலான் உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்துள்ளார்.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் டான் படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா,வினய்,தீபா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பிரியங்கா மோகன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படம் அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரில் இடம்பெற்ற மியூசிக் பெரிய வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான செல்லம்மா பாடலின் வீடியோ ப்ரோமோ ஒன்றை நாளை வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த பாடலின் மியூசிக் வீடியோ ஏற்கனவே செம ட்ரெண்ட் நடித்துள்ள நிலையில் வீடியோ பாடலின் ப்ரோமோவை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.