சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கப்பட்டது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி, விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும், சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக பிரியங்கா தேஷ்பாண்டே, இசைவாணி,ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமிதா மாரிமுத்து,பாவனி ரெட்டி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி,சுருதி ஜெயதேவன், அபிநய் வட்டி, அக்ஷரா ரெட்டி, தாமரைச்செல்வி, சின்ன பொண்ணு, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் என 18 போட்டியாளர்கள் தொடக்கத்திலேயே பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கியுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் நேற்று (அக்டோபர் 4) இந்த வாரத்திற்கான கேப்டன்கள் தேர்வு செய்யப்பட்டனர். பாத்ரூம் சுத்தம் செய்யும் அணிக்கு ராஜூ ஜெயமோகனும், சமையல் அணிக்கு சின்னப்பொண்ணும், பாத்திரம் கழுவும் அணிக்கு நமீதாவும், ஹவுஸ் கீப்பிங் அணிக்கு பாவனியும் கேப்டனாகளாக தேர்வு செய்யப்பட்டனர். இருப்பினும் முதல் வாரத்திற்கான பிக் பாஸ் வீட்டின் கேப்டன் தேர்வு இன்னும் நடைபெறவில்லை.

தொடர்ந்து கலகலப்பாக நேற்றைய நிகழ்ச்சி நிறைவு பெற்ற நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ தற்போது வெளியானது. பாடகி இசைவாணி தன் வாழ்வில் கடந்து வந்த கடினமான பாதைகளை பற்றி பேச பேச ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கலங்கிவிட்டனர். எமோஷனலான பிக்பாஸ் தமிழ் சீசன் 5 இன்றைய முதல் ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.