சன் டிவியில் ரீ-என்ட்ரி தருவதை உறுதி செய்த முன்னணி சீரியல் நடிகை !
By Aravind Selvam | Galatta | June 12, 2021 16:16 PM IST

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.
சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்
சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று மகராசி.இந்த தொடரின் ஹீரோயினாக திவ்யா ஸ்ரீதர் நடித்து வந்தார்.இந்த தொடரில் ஆர்யன் SSR,மௌனிகா தேவி என்று பல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.400க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து இந்த தொடர் வெற்றிகரமாக சென்று வருகிறது.
இந்த தொடரின் மூலம் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார் ஹீரோயின் திவ்யா ஸ்ரீதர்.இவர் இந்த தொடரில் இருந்து சில காரணங்களால் விலகியுள்ளார் இவருக்கு பதிலாக நாதஸ்வரம்,கல்யாண பரிசு உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான ஸ்ரித்திகா நடிக்கிறார்.இதனை உறுதிசெய்யும் செய்யும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வீடியோ வெளியிட்டுள்ளார் ஸ்ரித்திகா.சன் டீவியும் மகராசி தொடரில் ஸ்ரித்திகாவின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.
பாரதியின் புதிய பரிமாணத்தை பார்க்க தயாரா?
— Sun TV (@SunTV) June 12, 2021
Magarasi | Monday - Saturday | 12 PM#SunTV #Magarasi #MagarasiOnSunTV pic.twitter.com/5uPNBTGtq9