“உயிரும் நீயே.. உடலும் நீயே..” நடிகர் அஜித்தின் Travel Song இதுதான்.. இணையத்தில் நடிகை ஷாலினி பகிர்ந்த வீடியோ வைரல்..!

பயணங்களின் போது அஜித் கேட்கும் பாடல் ஷாலினி பகிர்ந்த வீடியோ உள்ளே - Ajith kumar favourite song while traveling | Galatta

தென்னிந்தியாவின் பல பிளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸ் வசூலை படத்திற்கு படம் உயர்த்தும் உச்சபட்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் அஜித் குமார். இந்த ஆண்டு இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாவும் நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் பாக்ஸ் ஆபிஸ்  சாதனையையும் செய்தது. தற்போது அஜித் குமார் லைகா தயாரிப்பு நிறுவனம் சார்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவிருக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அனிருத் இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படம் தற்போது முன் தயாரிப்பு பணியில் மும்முரமாக இருந்து வருகிறது.

இதனிடையே அஜித் குமார் தனது வாழ்நாள் கனவு பயணமான அமைதிக்கான பரஸ்பர பயணத்தில் ஒரு சில மாநிலங்களை பைக் பயணம் மூலம் முடித்தார். மேலும் AK Travel என்ற சுற்றுலா சார்ந்த நிறுவனத்தையும் துவங்கியுள்ளார் அஜித் குமார். விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாதம் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கவிருபதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித் அவர்கள் அவரது மனைவியும் பிரபல நடிகையுமான ஷாலினியுடன் காரில் பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் போது  எடுக்கப்பட்ட வீடியோவை நடிகை ஷாலினி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவுடன் “அவர் பயணத்தின் போது விரும்பி கேட்கும் பாடல் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.  வீடியோவில் கடந்த 1994 ல் ராதிகா சரத் குமார் நாசர் மற்றும் அஜித் குமார் நடிப்பில் வெளியான் பவித்ரா படத்தில் இடம்பெற்ற ‘உயிரும் நீயே உறவும் நீயே’ என்ற பாடல் ஒலித்து கொண்டிருந்தது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் வைரமுத்து எழுதிய இந்த பாடலை பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் பாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கும் நடிகர் அஜித் குமார் பொதுவாகவே சமூக வலைதளங்களில் இருப்பதை விரும்பாத நடிகர். மேலும் பொதுவெளியில் இணைவதும் அரிது. தனி நபர் வாழ்க்கையையே பெரிதும் எதிர்பார்ப்பவர்.  சமீபத்தில் அவரது மனைவியும் நடிகையுமான ஷாலினி அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். அதில் தனது அன்றாட வாழ்வியலை அவ்வப்போது பதிவிட்டு வருவார். அதில் அஜித் குமார் உடன் வெளிநாடுகள் , வெளிமாநிலங்கள் செல்லும் போது எடுக்கப்படும் வீடியோ புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அப்படி பகிரப்படும் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் வைரலாவது வழக்கம். தற்போது ஷாலினி பகிர்ந்துள்ள வீடியோவுடன் அஜித் குமார் குறித்த சுவாரஸ்யமான தகவல் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்து வைரலாகி வருகிறது.

 

இசையமைப்பாளராகும் கௌதம் மேனன்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.. – அட்டகாசமான அப்டேட்டுடன் இணையத்தில் வைரலாகும் வீடியோ..
சினிமா

இசையமைப்பாளராகும் கௌதம் மேனன்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.. – அட்டகாசமான அப்டேட்டுடன் இணையத்தில் வைரலாகும் வீடியோ..

முதல் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே உயிரிழந்த இயக்குனர்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..
சினிமா

முதல் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே உயிரிழந்த இயக்குனர்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..

சர்ச்சைக்குள்ளான 'தி கேரளா ஸ்டோரி' பட இயக்குனரின் அடுத்த படைப்பு.. இது தான் கதையா? - வைரலாகும் அறிவிப்பு உள்ளே..
சினிமா

சர்ச்சைக்குள்ளான 'தி கேரளா ஸ்டோரி' பட இயக்குனரின் அடுத்த படைப்பு.. இது தான் கதையா? - வைரலாகும் அறிவிப்பு உள்ளே..