ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இடம் பிடித்த மணிரத்னம்.. வாழ்த்து தெரிவித்த ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான்.. – வைரலாகும் பதிவு உள்ளே..

ஆஸ்கர் தேர்வு குழுவில் இடம் பிடித்த மணிரத்னத்தை வாழ்திய ஏ ஆர் ரஹ்மான் - Ar Rahman wishes Maniratnam for Oscar academy panel member | Galatta

இந்திய சினிமாவில் மிக சிறந்த படைப்பாளர்களில் ஒருவர் இயக்குனர் மணிரத்னம். கன்னட திரையுலகில் பல்லவி அனு பல்லவி படத்தில் அறிமுகமான மணிரத்னம். பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலே தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு பெருவாரியான வரவேற்பு கிடைக்க தொடர்ந்து மௌன ராகம், நாயகன், தளபதி, அஞ்சலி, ரோஜா போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார். ரஜினி, கமல் போன்ற உச்சபட்ச நடிகர்களை கதையின் நாயகனாக மாற்றி திரையுலகினரை வியக்க வைத்தவர் மணிரத்தினம். 80 களில் தொடங்கிய பயணம் 90 களில் தமிழ், இந்தியில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன்  1,2 ஆகிய திரைப்படங்கள் உலகளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று இந்திய சினிமா திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக மாறியது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பொன்னியின் செல்வன் மூலம் திரையுலகிற்கு கொடுத்தார் இயக்குனர் மணிரத்னம்.தற்போது மணிரத்னம் உலகநாயகன் கமல் ஹாசன் கூட்டணியில் ‘KH 234’ என்ற படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் இறங்கியுள்ளார். இந்நிலையில் உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக உலக ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட  ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் மணிரத்னம் இடம் பிடித்துள்ளார்.

திரைத்துறையில் தொழில் ரீதியான தகுதி மற்றும் அர்பணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளை கொண்டு ஆஸ்கர் குழுமத்தினரால் தேர்ந்தெடுக்கப் படும் இந்த பட்டியலில் இந்த ஆண்டு 398 கலைஞர் இடம் பிடித்துள்ளனர். இதில் மனிரத்னம் இயக்குனர் பிரிவில் இடம் வகித்துள்ளார். இந்த அறிவிப்பினை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் இணைந்த மணிரத்னம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஏ ஆர் ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில், “அகாடமி விருது உறுப்பினர் குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டதற்கு வாழ்த்துகள் மனிரத்னம் சார்.. பொன்னியின் செல்வன்  1,2 , ரோஜா, பாம்பே, தில் சே, மேலும் பல..! ஆஸ்கர் குழுவுக்கு உங்களை வரவேற்கிறேன்.! என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதையடுத்து இணையத்தில் ஏ ஆர் ரஹ்மான் பதிவு வைரலாகி வருகிறது.

Congratulations #Manirathnam sir for becoming member of the @TheAcademy …. #Oscar #PS 1& 2 #Dilse #Roja #Bombay and many more! Welcome to the club😊❤️‍🩹😍🎉

— A.R.Rahman (@arrahman) June 28, 2023

மேலும் பட்டியலில் மணிரத்னம் உடன் ஆர்ஆர் ஆர் படக்குழுவினர்  ராம் சரண், ஜூனியர் என்டிஆர், எம் எம் கீரவாணி, சந்திரபோஸ், கேகே செந்தில் குமார் உள்ளிட்ட பலர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். முன்னதாக இந்த உறுப்பினர் குழுவில் ஏ ஆர் ரஹ்மான், கஜோல், சூர்யா உள்ளிட்டோர் சிலர் இடம் பெற்றுள்ளனர். இதில் நடிகர் சூர்யா முதல் தென்னிந்திய நடிகராக இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளராகும் கௌதம் மேனன்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.. – அட்டகாசமான அப்டேட்டுடன் இணையத்தில் வைரலாகும் வீடியோ..
சினிமா

இசையமைப்பாளராகும் கௌதம் மேனன்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.. – அட்டகாசமான அப்டேட்டுடன் இணையத்தில் வைரலாகும் வீடியோ..

முதல் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே உயிரிழந்த இயக்குனர்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..
சினிமா

முதல் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே உயிரிழந்த இயக்குனர்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..

சர்ச்சைக்குள்ளான 'தி கேரளா ஸ்டோரி' பட இயக்குனரின் அடுத்த படைப்பு.. இது தான் கதையா? - வைரலாகும் அறிவிப்பு உள்ளே..
சினிமா

சர்ச்சைக்குள்ளான 'தி கேரளா ஸ்டோரி' பட இயக்குனரின் அடுத்த படைப்பு.. இது தான் கதையா? - வைரலாகும் அறிவிப்பு உள்ளே..