இசையமைப்பாளராகும் கௌதம் மேனன்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.. – அட்டகாசமான அப்டேட்டுடன் இணையத்தில் வைரலாகும் வீடியோ..

இசையமைப்பாளராக களமிறங்கும் கௌதம் மேனன் வைரல் வீடியோ உள்ளே -Director Gautham vasudev menon turns music director | Galatta

தென்னிந்திய திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். காதல் கதைகளத்தில் பல்வேறு வாழ்வியலை அழகாய் பேசும் கௌதம் மேனனுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமாகி பின் சூர்யா, கமல் ஹாசன், அஜித் குமார், சிலம்பரசன், தனுஷ் போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். அதன்படி பல பிளாக் பஸ்டர் திரைப்படங்களை கௌதம் மேனன் கொடுத்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் கௌதம் மேனன் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திரைதுரையில் கவனம் ஈர்த்தார். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு சிலம்பரசன் TR நடித்து வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ஜோஷ்வா இமை போல் காக்க மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. மேலும் தொடர்ந்து மீண்டும் சிலம்பரசன் உடன் கூட்டணி அமைத்து ‘வெந்து தணிந்தது காடு 2’ படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து முன்னணியில் வலம் வந்த கௌதம் வாசு தேவ் மேனன் நடிகராகவும் பல முக்கிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்படி ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘பத்து தல’, ‘விடுதலை 1’ ஆகிய படங்களில் நடித்து தற்போது ஒரு நடிகராகவும் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். மேலும் கௌதம் மேனன் தற்போது தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பின் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை 2 படத்திலும் நடித்து வருகிறார்.

ரசிகர்களிடையே பன்முக திறமையுடன் கவனம் ஈர்த்து வரும் கௌதம் மேனன் தற்போது இசையமைப்பாளராகவும் திரைத்துறையில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியது.

“ஒன்றாக என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அடுத்ததாக வரும் ஆல்பம் பாடலான ‘முத்த பிச்சை’ பாடல் நாளை ஜூன் 29ம் தேதி வெளியாகவுள்ளது. அந்த பாடலை  நான் இசையமைத்துள்ளேன். மதன் கார்கி அப்பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார். ஒரு படம் நடக்காம போன போது ஒரு ஆதங்கத்தில் ஒரு 6 பாடல்களை இசையமைத்து வைத்திருந்தேன் அதுல ஒன்னு இது. கொஞ்சம் எல்லா விஷயத்தையும் அளவு கடந்து பேசியிருக்கும் பாடல் இது.” என்று பேசியுள்ளார்.

இதையடுத்து கௌதம் மேனன் வெளியிட்ட வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இசையமைப்பாளராக களமிறங்கும் கௌதம் மேனனுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் கௌதம் மேனன் ஏற்கனவே திரைப்படங்களில் சில பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The magic unfolds tomorrow✨

Stay Tuned for #MuththaPichchai from #OndragaOriginals❤‍⚡#MuththaPichchaiFromTomorrow

Composed by @menongautham
A @madhankarky Lyrical @Preethisrivijay @oruoorileoru @santhoshsreera5 #UrmilaKrishnan pic.twitter.com/WFO72m83mr

— OndragaEntertainment (@OndragaEnt) June 28, 2023

“நாட்டு மக்களை அறிவில்லாதவர்கள் என நினைத்தீர்களா?” பிரபாஸின் ஆதிபுருஷ் படக்குழுவினரை விளாசிய நீதிமன்றம்..
சினிமா

“நாட்டு மக்களை அறிவில்லாதவர்கள் என நினைத்தீர்களா?” பிரபாஸின் ஆதிபுருஷ் படக்குழுவினரை விளாசிய நீதிமன்றம்..

26 வருட கொண்டாட்டத்தில் சூர்யவம்சம் திரைப்படம்.. ரசிகர்களுக்கு சரத்குமார் கொடுத்த ட்ரீட்..!
சினிமா

26 வருட கொண்டாட்டத்தில் சூர்யவம்சம் திரைப்படம்.. ரசிகர்களுக்கு சரத்குமார் கொடுத்த ட்ரீட்..!

பிச்சைக்காரன் 2 ஹிட்..! அடுத்த முக்கிய படத்தை வெளியிட முன் வந்த விஜய் ஆண்டனி.. – உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

பிச்சைக்காரன் 2 ஹிட்..! அடுத்த முக்கிய படத்தை வெளியிட முன் வந்த விஜய் ஆண்டனி.. – உற்சாகத்தில் ரசிகர்கள்..