முதல் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே உயிரிழந்த இயக்குனர்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..

ரிலீஸுக்கு முன்பே இறந்த இயக்குனர் அதிர்ச்சியில் திரையுலகினர் -  Malaiyalam director passes away before release | Galatta

மலையாள திரையுலகில் தயாரிப்பு நிர்வாகியாக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றியவர் பைஜூ பரவூர். அதன்படி 20 ஆண்டுகளில் சுமார் 45 படங்களுக்கு மேல் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி திரைத்துறையில் தனக்கென தனி பெயரை சம்பாதித்து வைத்தவர். இவர் தக்ஷ், சினேகா நடிப்பில் ‘சீக்ரெட்ஸ்’ என்ற படத்தை பைஜூ பரவூர் இயக்கி முதல் முறையாக இயக்குனராக களமிறங்கியுள்ளார். மலையாள திரையுலகில் நல்ல பெயரையும் அந்தஸ்தையும் பெற்ற பைஜூ பரவூரின் முதல் படம் ரிலீஸ் குறித்து தனி எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

சீக்ரெட்ஸ் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணி தற்போது நடைபெற்று  வரும் நிலையில் எதிர்பாராத விதமாக அப்படத்தின் இயக்குனரும் பிரபல தயாரிப்பு நிர்வாகியுமான பைஜூ பாரவூர் மரணமடைந்துள்ளார். மர்மமான முறையில் இறந்த பைஜூ பரவூர் இழப்பு திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் முதல் முறையாக தான் இயக்கிய திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இறந்தது திரையுலகில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பைஜூ பரவூரின் மரணத்தில் சந்தேகம் எழ பின் அவரது மரணம் குறித்து விசாரணையில் இறங்கியது போலீஸ். விசாரணையில், பைஜூ பரவூர் இயக்கி முடித்த சீக்ரட்ஸ் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலையில் இருந்தவர் அந்த வேலையை முடித்து விட்டு கோழிகோட்டில் இருந்து குன்னம் குளத்தில் உள்ள மனைவி வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளார். வழியில் உணவகம் ஒன்றில் இறங்கி பைஜூ பரவூர் சாப்பிட்டுள்ளார். அதன்பின் வீட்டுக்கு வந்த பைஜூ பரவூர் உடல் நிலையில்  மாற்றம் நிகழ்ந்துள்ளது. பின் உடல் நிலை மோசமாக அருகில் உள்ள மருத்துவமனையில் பைஜூ பரவூர் அனுமதிக்கப் பட்டார். அதன் பின் மேல் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மறைந்த பைஜூ பரவூரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூறுகையில், பைஜூவின் திடீர் மரணம் உணவில் விஷம் கலந்ததால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மறைந்த இயக்குனர் பைஜூ பரவூருக்கு ஆரத்யா மற்றும் ஆரவ் என இரு குழந்தைகள் உள்ளனர்.

தனது முதல் படமான ரகசியம் வெளியாகவுள்ள நிலையில் பைஜூ பரவூரின்  அகால மரணம் திரையுலகினரை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. மேலும் இவரது மறைவிற்கு ரசிகர்கள் திரையுலகினர் தற்போது தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.  

26 வருட கொண்டாட்டத்தில் சூர்யவம்சம் திரைப்படம்.. ரசிகர்களுக்கு சரத்குமார் கொடுத்த ட்ரீட்..!
சினிமா

26 வருட கொண்டாட்டத்தில் சூர்யவம்சம் திரைப்படம்.. ரசிகர்களுக்கு சரத்குமார் கொடுத்த ட்ரீட்..!

பிச்சைக்காரன் 2 ஹிட்..! அடுத்த முக்கிய படத்தை வெளியிட முன் வந்த விஜய் ஆண்டனி.. – உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

பிச்சைக்காரன் 2 ஹிட்..! அடுத்த முக்கிய படத்தை வெளியிட முன் வந்த விஜய் ஆண்டனி.. – உற்சாகத்தில் ரசிகர்கள்..

மாரியம்மா முதல் ரெனே வரை.. நடிகை துஷாரா விஜயன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview உள்ளே..
சினிமா

மாரியம்மா முதல் ரெனே வரை.. நடிகை துஷாரா விஜயன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview உள்ளே..