ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ ஒடிடி ரிலீஸ் எப்போது? – அட்டகாசமான அப்டேட்டுடன் வெளியான வீடியோ இணையத்தில் வைரல்..

ஃபர்ஹானா ஒடிடி ரிலீஸ் வெளியான அட்டகாசமான வீடியோ - Aishwarya rajesh Farhana movie ott release date out now | Galatta

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டகாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்படி சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் ஃபர்ஹானா. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளங்களில் ஒருநாள் கூத்து. மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் இணைந்து ஜித்தன் ரமேஷ், கிட்டி, ஐஸ்வர்யா தத்தா, அனுமோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் இப்படத்தில் நடித்துள்ளார். ட்ரீம் வாரியார் பிக்சர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இஸ்லாமிய பெண்ணின் வாழ்க்கையும் அந்த பெண் சந்திக்கும் சூழலையும் மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதே நேரத்தில் இஸ்லாமிய மதத்தினரை இழிவாக சித்தரிக்கும் வகையில் படம் அமைந்திருக்கும் அதனால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட சிலருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சர்ச்சைகளுக்கு படக்குழுவினர் தெளிவான விளக்கம் அளித்த பின்னர் அதன்படி ஃபர்ஹானா திரைப்படம் கடந்த மே 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. இருந்தும் சில இடங்களில் ஃபர்ஹானா திரையிடாமல் இருந்தது. ஃபர்ஹானா திரையரங்குகளில் வெளியான பின்பு சர்ச்சைக்குரிய எந்தவொரு நிகழ்வும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் நல்ல விமர்சனத்தை பெற்று இந்த ஆண்டு வெளியான நல்ல திரைப்படங்களின் பட்டியில் ஃபர்ஹானா திரைப்படம் இணைந்து படக்குழுவினருக்கு வெற்றியை கொடுத்தது.

Mark you calendars ! It's time to witness a gripping story unfold before your eyes. #Farhana Movie streaming exclusively on @SonyLIV from July 7.@selvaraghavan @JithanRamesh @aishwaryadutta6 @anumolofficial @justin_tunes @gokulbenoy @EditorSabu @nelsonvenkat @prabhu_srpic.twitter.com/qZi3ntd3NT

— aishwarya rajesh (@aishu_dil) June 28, 2023

ஃபர்ஹானா திரைப்படம் வெளியாகி இரண்டு மாதம் முடிந்த நிலையில் இப்படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ஃபர்ஹானா படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி குறித்து புத்தம் புது டிரைலருடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின் படி ஃபர்ஹானா திரைப்படம் வரும் ஜூலை 7ம் தேதி சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்புடன் வெளியான வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

சர்ச்சைக்குள்ளான 'தி கேரளா ஸ்டோரி' பட இயக்குனரின் அடுத்த படைப்பு.. இது தான் கதையா? - வைரலாகும் அறிவிப்பு உள்ளே..
சினிமா

சர்ச்சைக்குள்ளான 'தி கேரளா ஸ்டோரி' பட இயக்குனரின் அடுத்த படைப்பு.. இது தான் கதையா? - வைரலாகும் அறிவிப்பு உள்ளே..

“நாட்டு மக்களை அறிவில்லாதவர்கள் என நினைத்தீர்களா?” பிரபாஸின் ஆதிபுருஷ் படக்குழுவினரை விளாசிய நீதிமன்றம்..
சினிமா

“நாட்டு மக்களை அறிவில்லாதவர்கள் என நினைத்தீர்களா?” பிரபாஸின் ஆதிபுருஷ் படக்குழுவினரை விளாசிய நீதிமன்றம்..

26 வருட கொண்டாட்டத்தில் சூர்யவம்சம் திரைப்படம்.. ரசிகர்களுக்கு சரத்குமார் கொடுத்த ட்ரீட்..!
சினிமா

26 வருட கொண்டாட்டத்தில் சூர்யவம்சம் திரைப்படம்.. ரசிகர்களுக்கு சரத்குமார் கொடுத்த ட்ரீட்..!