இசையமைப்பாளராக மிஷ்கினின் முதல் படம்...  மனதை வருடும் மெலடியில் வந்த ரொமான்டிக்கான முதல் பாடல் இதோ!

இசையமைப்பாளராக மிஷினின் முதல் பட முதல் பாடல் வெளியீடு,mysskin debut movie as music composer devil first single out now | Galatta

இயக்குனர் மிஷ்கின் முதல் முறை இசையமைப்பாளராக களமிறங்கும் டெவில் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது. தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சைக்கோ. உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கதாப்பாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்த சைக்கோ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் அடுத்தடுத்த படங்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அந்த வகையில் பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்த பிசாசு 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பிசாசு 2 திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என சமீபத்தில் மிஷ்கின் தெரிவித்திருந்தார். தொடர்ந்து விஜய் சேதுபதி கதை நாயகனாக நடிக்க இருக்கும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்குனர் மிஷ்கின் இயக்க இருக்கிறார். அதற்கான எழுத்து பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் சமீபத்தில் மிஷ்கின் தெரிவித்திருந்தார்.  

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், சுட்டுப் பிடிக்க உத்தரவு & பேச்சுலர் என முக்கியமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இயக்குனர் மிஷ்கின், அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தொடர்ந்து மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துவரும் மாவீரன் திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்திருக்கிறார். இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இயக்குனர் மிஷ்கின், இசைஞானி இளையராஜா அவர்களின் தீவிர ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சமீப காலமாக இசையின் மீது மிகுந்த ஆர்வம் செலுத்தி வரும் விரைவில் ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் என தகவல்கள் வெளிவந்த நிலையில், இயக்குனர் மிஷ்கின் தற்போது இசை அமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் தான் டெவில்.

இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில்  விதார்த் கதையும் நாயகனாக நடிக்க நடிகை பூர்ணா கதையின் நாயகியாக நடிக்கும் டெவில் திரைப்படத்தில் த்ரிகுன் மற்றும் சுபஸ்ரீ முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மாருதி ஃபிலிம்ஸ் மற்றும் H பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர்.ராதா கிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி ஆகியோரோடு  பி.ஞானசேகர் இணைந்து தயாரிக்கும் டெவில் படத்திற்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார். இசையமைப்பாளராக களமிறங்கும் டெவில் திரைப்படத்தின் பாடல்களையும் இயக்குனர் மிஷ்கின் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெவில் திரைப்படத்தின் முதல் பாடலாக "கலவிப் பாடல்" என்ற பாடல் தற்போது வெளிவந்தது. மிஷ்கின் எழுதி இசை அமைத்திருக்கும் இந்த கலவி பாடலை தேவு மேத்யூ பாடி இருக்கிறார். அட்டகாசமான மெலடி பாடலாக வந்திருக்கும் ரொமான்டிக்கான இந்த கலவி பாடல் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இசையமைப்பாளர் மிஷ்கினின் ரொமான்டிக் ட்ரீட்டாக வந்த அந்த கலவி பாடல் இதோ…
 

துல்கர் சல்மானின் அதிரடி கேங்ஸ்டர் அவதாரத்தில் வரும் கிங் ஆஃப் கொத்தா படம்… மிரட்டலான செம்ம மாஸ் டீசர் இதோ!
சினிமா

துல்கர் சல்மானின் அதிரடி கேங்ஸ்டர் அவதாரத்தில் வரும் கிங் ஆஃப் கொத்தா படம்… மிரட்டலான செம்ம மாஸ் டீசர் இதோ!

“இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது!”- ஷங்கருக்கு வாட்ச் பரிசளித்த கமல்ஹாசன்… இந்தியன் 2 பட பக்கா மாஸ் அப்டேட் இதோ!
சினிமா

“இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது!”- ஷங்கருக்கு வாட்ச் பரிசளித்த கமல்ஹாசன்… இந்தியன் 2 பட பக்கா மாஸ் அப்டேட் இதோ!

சினிமா

"INTERVAL-ல தியேட்டர் எல்லாம் வெடிக்கும்!"- மாரி செல்வராஜின் மாமன்னன் பட முதல் விமர்சனம் கொடுத்த 'கர்ணன்' தனுஷ்! அதிரடி பதிவு இதோ