பாலிவுட்டில் துணை நடிகையாக அறிமுகமாகி பிறகு தெலுங்கு திரையுலகில் லக்ஷ்மி கல்யாணம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக  அறிமுகமானவர் காஜல் அகர்வால்.தெலுங்கு தமிழ் மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் இயக்குனர் S.S.ராஜமவுலி இயக்கத்தில் நடித்த மகதீரா திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் மிகுந்த பிரபலம் அடைந்தார். 

தொடர்ந்து தமிழில் கார்த்தியுடன் இணைந்து நான் மகான் அல்ல,  அஜய் தேவ்கன் நடித்த சிங்கம் படத்தின் ஹிந்தி ரீமேக், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிசினஸ்மேன் தளபதி விஜய்யுடன் துப்பாக்கி என தொடர் வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 

நடிகர் சூர்யாவுடன் மாற்றான் ,நடிகர் தனுஷுடன் மாரி , நடிகர் அஜித்குமாரின் விவேகம் என தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து கோமாளி திரைப்படத்திலும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸிலும் நடித்திருந்தார். 

அடுத்ததாக இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து “இந்தியன்-2” திரைப்படத்திலும் நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து  “ஹே சினாமிகா” திரைப்படத்திலும் நடிக்கும்  காஜல் அகர்வால் அடுத்ததாக  பாலிவுட்டில் கதாநாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

பிரபலமான விளம்பர பட இயக்குனர் டதகட்டா சிங்கா  இயக்கத்தில் “உமா” திரைப்படத்தில் “உமா” என்ற கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். மீரஜ் குரூப் சார்பில் அவிஷேக் கோஷ்  மற்றும் மந்த்ரராஜ்  பலிவால் இப்படத்தை தயாரிக்கிறார்கள். விரைவில் இத்திரைப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் “உமா” திரைப்படத்தின் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.