தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர்.

இவர்களது சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களின் நெஞ்சங்களில் பல வருடங்களாக அசைக்கமுடியாத இடத்தை பிடித்துள்ள ஒரு தொடர் யாரடி நீ மோகினி.முதலில் சஞ்சீவ் இந்த தொடரில் நாயகனாக நடித்து வந்தார்.பின்னர் சில காரணங்களால் இவர் இந்த தொடரில் இருந்து விலக அவருக்கு பதிலாக ஸ்ரீகுமார் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.

நக்ஷத்திரா இந்த தொடரின் நாயகியாகவும்,யமுனா சின்னதுரை இந்த தொடரில் மோகினியாகவும் அசத்தி வருகின்றனர்.சைத்ரா ரெட்டி இந்த தொடரில் வில்லியாக நடித்து பேராதரவை பெற்று வருகிறார்.பாத்திமா பாபு இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.இவர்களை தவிர இன்னும் பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த தொடர் சமீபத்தில் 1000 எபிசோடுகளை கடந்து அசத்தல் சாதனையை நிகழ்த்தியது.தற்போது இந்த தொடரில் முக்கிய வந்த ஸ்ருதி செல்வம் சில காரணங்களால் வெளியேற அவருக்கு பதிலாக பூவே பூச்சூடவா தொடரில் நடித்து வரும் தனலக்ஷ்மி புதிதாக இணைந்துள்ளார்.